இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. அனைத்து முன்னணி அணிககளும் இந்த தொடருக்காக தயாராகி வருகின்றனர். பாகிஸ்தானில் இந்த போட்டித் தொடர் நடந்தாலும் இந்திய அண ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது.
கம்பீர் - அகர்கர் மோதல்?
சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்திய அணிக்குள் புது மோதல் உருவாகியுள்ளது. அந்த மோதல் பயிற்சியாளர் கம்பீருக்கும், தேர்வாளர் அஜித் அகர்கருக்கும் இடையே ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஆர்டரில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிடில் ஆர்டரில் இந்திய அணியின் பக்கபலமாக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். தற்போது நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் மிடில் ஆர்டரில் முக்கிய பங்கு வகித்தார்.
விக்கெட் கீப்பர் யார்?
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிஷப்பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளனர். இதில் கவுதம் கம்பீர் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலை தேர்வு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால், தேர்வாளர் அஜித் அகர்கரோ இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப்பண்ட் இடம்பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
கம்பீர் முதன்மை விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுலை முதன்மை விக்கெட் கீப்பராக களமிறக்கி, ஸ்ரேயாஸ் ஐயரை இரண்டாவது விக்கெட் கீப்பராக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்வுக்குழு தலைவரான அகர்கர் ரிஷப்பண்ட்டை முதன்மை விக்கெட் கீப்பராக களமிறக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
மிடில் ஆர்டர் பஞ்சாயத்து:
இந்திய அணிக்காக ஒரே நேரத்தில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ், ரிஷப்பண்ட் களமிறங்குவது மிக மிக சவாலான விஷயம் ஆகும். இவர்கள் 3 பேரில் இரண்டு பேரை மட்டுமே களமிறக்குவதற்கே அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால், இவர்களில் எந்த 2 பேரை களமிறக்குவது என்பதில் அஜித் அகர்கர் - கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுக்குழு கூட்டத்தின்போது ஸ்ரேயாஸ் ஐயரை எந்த இடத்தில் களமிறக்குவது என்பது குறித்தும், அணியின் இரண்டாவது விககெட் கீப்பர் யார்? என்பது குறித்தும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், விவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி:
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான அணியில் சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அணியின் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர். மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் விதமாக ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். இவர்களில் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப மிடில் ஆர்டர் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

