மீண்டும் கோலிவுட் பக்கம் தலைகாட்டிய ஜெனிலியா...சச்சின் படம் பற்றி என்ன சொல்லிருக்காங்க பாருங்க
விஜய் நடித்த சச்சின் திரைப்படம் மீண்டும் திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அப்படத்தில் பணியாற்றியது குறித்து நடிகை ஜெனிலியா பதிவிட்டுள்ளார்

சச்சின் ரீரிலீஸ்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே போல தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகும் தருணமும் ரசிகர்களுக்கு மிக வருத்தத்தை ஏற்படுத்தும் தருனமாக இருக்கும். எச் வினோத் இயக்கத்தில் உருவாகும் விஜயின் கடைசி படத்திற்கு ஜன நாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கே.வி என் ப்ரோடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே , பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரகாஷ் ராஜ் , கெளதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஒரு பக்கம் ஜனநாயகன் படம் உருவாகி வரும் நிலையில் இன்னொரு பக்கம் விஜயின் கிளாசிக் ஹிட் படங்கள் திரையரங்கில் ரீரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு விஜயின் கில்லி படம் வெளியாகி வசூல் வேட்டையாடியது. தற்போது விஜயின் சச்சின் படம் மீண்டும் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
சச்சின் படம் கடந்த 2005ம் ஆண்டு ரிலீசான படம். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் வெளியானதை கொண்டாடும் விதமாக தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. சச்சின் படத்தை பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருப்பார். விடி விஜயன் ஒளிப்பதிவு செய்திருப்பார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருப்பார். அவருடன் வடிவேலுவும் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். படத்தில் விஜய் - ஜெனிலியா காட்சிகளுக்கு இணையாக, வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவை.
சச்சின் படம் குறித்து நடிகை ஜெனிலியா
Sachein - Has my heart always 💚 https://t.co/8H278xtKqO
— Genelia Deshmukh (@geneliad) February 17, 2025
சச்சின் படம் ரீரிலீஸ் ஆவதை பற்றி நடிகை ஜெனிலியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " சச்சின் படத்திற்கு என் மனதில் எப்போதும் நெருக்கமான இடம் உண்டு '. என அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படக்குழு தன்னை ரொம்ப மரியாதையாக நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்"
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

