மேலும் அறிய
Rajinkanth in Tiruvannamalai : திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
Rajinkanth in Tiruvannamalai : ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமைச்சர் எ.வ.வேலுவுடன் ரஜினிகாந்த்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தமானார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், “மொய்தீன் பாய் வந்தாச்சு.. சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..” என குறிப்பிடப்பட்டது.
2/6

இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக திருவண்ணாமலையில் நடைப்பெற்று வருகிறது.
3/6

படப்பிடிப்பு தளமான திருவண்ணாமலைக்கு சென்ற ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு, அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
4/6

தற்போது, திருவண்ணாமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலுவை சந்தித்துள்ளார் ரஜினி.
5/6

ரஜினிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
6/6

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 03 Jul 2023 11:34 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement