Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
பாலக்கோடு அருகே மீண்டும் மீண்டும் ஒரே வீட்டில் சிறுத்தை ஒன்று வேட்டையாடி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் இதுகுறித்த சிசிடிவி வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளான தளி,தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருகிறது.
இந்நிலையில், பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்,இன்று அதிகாலை வீட்டின் வெளியே வித்தியாசமான சத்தம் கேட்கவே வேகமாக வெளியில் வந்து பார்த்தபோது,சிறுத்தை, ஒன்று விநாயகம் வீட்டின் வெளியே நின்ற நிலையில் உறங்கி கொண்டிருந்த இரு சேவல்களில் ஒரு சேவலை பதுங்கி சென்று கவ்விச்சென்றது.இது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதே வீட்டில் கடந்த 3-மாதமாக கோழி, நாயை கவ்வி சென்ற வேட்டையாடிய சிறுத்தை தற்பொழுது, அதே வீட்டில் சேவலை கவ்வி செல்லும் இந்த சிசிடிவி காட்சி விநாயகம் குடும்பத்ததினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி ,கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி குடியிருப்புகளுக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள்ளும் சிறுத்தை நுழைந்துள்ளது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட பாலக்கோடு வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விநாயகம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















