லாரியில் சிக்கிய BIKE மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி | Villupuram | Accident News
மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு பகுதியில் நெடுஞ்சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர் எழுந்து நடந்து செல்லும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடு பகுதியை சார்ந்தவர் பயாஸ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக கூனி மேடு பகுதியில் இருந்து புதுச்சேரியை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சென்ற பேருந்து திடீரென வேகத்தை குறைத்து பிரேக் போட்டதால் பேருந்து மீது மோதாமல் இருக்க இளைஞர் பிரேக் பிடித்தபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்து இழுத்து கொண்டே சென்றது.
இதில் எதிரே வந்த கனரக லாரியில் இருசக்கர வாகனம் விழுந்து நெறுங்கியது. இந்தநிலையில் இளைஞர் சாலையில் விழுந்து மயிரிழையில் உயிர் தப்பி எழுந்து நடந்து செல்லும் பதபதைக்க வைக்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.




















