மனைவியை 'பளார்' என்று அறைந்த கணவர்: கணவருக்கு ஓராண்டு சிறை, மனைவியுடன் பேச 3 ஆண்டு தடை...நீதிமன்றம் ஆணை...!
மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறையும், மனைவியுடன் பேச மூன்று ஆண்டு சிறையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறையும், மனைவியுடன் பேச மூன்று ஆண்டு சிறையும் விதித்து சொரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஸ்பெயின் நாட்டின் சொரியா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் டிக்டாக்கில் தனது நான்கு நண்பர்களுடன் லைவ்வில் நடைபெற்ற ஒரு போட்டி ஒன்றில் பங்கேற்றார். கடந்த மாதம் 28ஆம் தேதி இந்த லைவ் நடந்தது. அப்போது திடீரென அந்த இளம்பெண்ணை அவரது கணவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அந்த பெண் டிக்டாக் லைவ்விலேயே பயங்கரமாக அழுந்துள்ளார். இவை அனைத்தும் லைவ்வில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட பெண் சிமோனா (23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மனைவி கன்னத்தில் கணவர் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் கணவர் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனால் இந்த வீடியோவை பார்த்த போலீசார் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
#APOYOROCIO27E @anaisbernal
— LA YAYA👵 (@layayadenick) January 27, 2023
Me han pedido q difunda este video de lo q por lo visto sucedió en un directo en Tiktok ayer noche, por lo q he leído la chica dice q es su padre pero supuestamente es su pareja, fijaros la bofetada q dió a la chica en directo, Estoy alucinada. pic.twitter.com/MZSKQ7w1Ls
இவர் சொரியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆயரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பெண்ணை அவமானப்படுத்திய குற்றத்திற்காக, மனைவியை கன்னத்தில் அடித்த கணவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனைவிக்கு அருகே 300 மீட்டர் (1,000 அடி) தொலைவுக்குள் வரவும், மனைவியுடன் 3 ஆண்டுகள் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த ஆயுதங்களும் வாங்கவும் தடை விதித்து சொரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருக்கும் எதிராக நீதிமனன்றத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மறுத்ததாகவும், அவர் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் நாட்டில் பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக பல சட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே மனைவியை அறைந்த கணவருக்கு ஓராண்டு சிறையும், 3 ஆண்டுகள் மனைவியுடன் பேச தடையும் விதித்து சொரியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க