கோவை சரளாவுடன் ஒரே அறைக்குள் இருந்த வடிவேலு.. என்னடா வம்பா போச்சு.. துரத்தி அடித்த பிரபல இயக்குநர்!
கோவை சரளாவுடன் ஒரே அறைக்குள் வடிவேலு அடித்த லூட்டியை சொல்லி மாள முடியாது என பிரபல இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் குடும்ப படங்களை எடுப்பதில் பெயர் எடுத்தவர் வி.சேகர். இவர், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, பொறந்த வீடா புகுந்த வீடா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், பெண் ரசிகர்களும் அதிகம் விரும்பி பார்க்கும் படமாகவே இருந்திருக்கிறது. இயக்குநர் வி.சேகர் இல்லையென்றால் வடிவேலு இல்லை என்பதே உண்மை. இவர், கோவை சரளாவுடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே ஹிட் படங்களாக இருந்துள்ளன.
கோவை சரளா - வடிவேலு காம்போ
காமெடி என்றால் வடிவேலு - கோவை சரளா என்ற அளவிற்கு பெயர் எடுத்துள்ளனர். இன்றைக்கும் மக்கள் விரும்பி ரசிக்கும் காமெடி காட்சிகளில் வி. சேகரின் படங்களும் இருக்கின்றன. இந்நிலையில், நடிகர் வடிவேலு குறித்து இயக்குநர் வி.சேகர் மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வி.சேகர், என் படங்களில் நடித்தால் நடிகர்களின் சம்பளம் உயர்ந்து விடும் என்பது அப்போது பேச்சாக இருந்தது. நான் இயக்கிய படங்கள் அனைத்தும் 100 நாட்களை கடந்து வெற்றிப்படமாக இருந்தது. அப்போ வடிவேலு தேவர் மகன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் என்கிட்ட வந்து சார் உங்க படத்துல ஏதாவது ஒரு காமெடி ரோல் கொடுத்தீங்கனா நல்லா இருக்கும். எனக்கும் மார்க்கெட் உயரும் என தெரிவித்தார்.
கேப்டனை எதிர்த்து பேசிய வடிவேலு
மேலும் பேசிய அவர், என்னப்பா இப்படி சொல்ற என் படத்துல மனோராமா, கவுண்டமணி, செந்தில், சரளா இவங்க இல்லாம எப்படி உன்னை சேர்ப்பது. கடல் மாதிரி இருக்க இடத்துல நீ திருவிழா கூட்டத்துக்கு வந்தது மாதிரி இருக்க, பொறுமையா இரு நல்ல ரோல் வந்தா சொல்றேன் என்றேன் அப்படித்தான் வடிவேலு என் படத்தில் நடிக்க வந்தார். நான் இயக்கிய படங்களில் நடித்த பிறகு வடிவேலு மார்க்கெட் உயர்ந்தது. நல்ல சம்பளமும் பெற்றார். வடிவேலு மார்க்கெட் சரிய காரணம் கேப்டனை எதிர்த்து பேசுனது தான். நான் அப்பவே அரசியல் வேணாம்டா நீ காணாம போயிடுவ என்று சொன்னேன். ஆனால், வடிவேலு கேட்கவில்லை என இயக்குநர் வி.சேகர் தெரிவித்தார்.
மேக்கப் போட ஒரே அறை
அதே மாதிரி நான் இயக்கிய ஒரு படத்தில் வடிவேலுவுடன் கோவை சரளாவை ஜோடியாக வைத்து கமிட் செய்தேன். அந்த ஷூட்டிங்கின்போது என்னிடம் வந்த வடிவேலு, எனக்கும் சரளாவுக்கும் தனித்தனி மேக்கப் ரூம் போடாதீங்க. ஒரே ரூமில் போடுங்கள் செலவு மிச்சமாகும் என்று கூறியதும், அவர் சொன்ன யோசனை நல்லா இருக்கே என்று நினைத்தேன். ஆனால், இருவரும் ஒரே ரூமூக்குள் போனதும் கதவை சாத்திக்கொண்டு திறப்பதே இல்லை. இதை பார்த்த என் உதவி இயக்குநர் என்கிட்ட வந்து சொன்னதும், மேக்கப் போட போயிருப்பாங்க ஏன் டிஸ்டர்ப் பன்ற என்றேன். இல்லை சார் ரொம்ப நேரமா கதவு மூடியே இருக்கு, கதவை தட்டினாலும் திறக்க மாட்டேங்குறாங்க என்றதும், நான் டென்ஷன் ஆகி இந்த படத்தில் கோவை சரளா நடிக்க வேண்டிய அவசியமே இல்லை என துரத்தி விட்டேன். அதுக்கு அப்புறம் வடிவேலு, கோவை சரளா காம்போவில் படம் பண்ணவே இல்லை என வி.சேகர் தெரிவித்தார்.





















