Gold Rate Today 23rd July: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 75 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய விலை நிலவரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 75 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடுவில் சில நாட்கள் விலை குறைந்த தங்கம், மீண்டும் படிப்படியாக விலை உயர்ந்து தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15-ம் தேதி, கிராம் 9,145 ரூபாயாகவும், சவரன் 73,160 ரூபாயாகவும் இருந்தது. அதன்பின் சற்று குறைந்து, 16-ம் தேதி கிராம் 9,100 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,800 ரூபாயாகவும் விற்பனையானது.
தொடர்ந்து, 17-ம் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,105 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 18-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,110 ரூபாயாகவும், ஒரு சவரன் 72,880 ரூபாயாகவும் விற்கப்பட்டது.
பின்னர், 19-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,170 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73 ஆயிரத்தை கடந்த 73,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 20-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 21-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,180 ரூபாய்க்கும், ஒரு சவரன் 73,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து, 22-ம் தேதியான நேற்று கிராமிற்கு அதிரடியாக 105 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,285 ரூபாயாகவும், ஒரு சவரன் 74 ஆயிரத்தை கடந்து, 74,280 ரூபாய்க்கு விலை எகிறியது.
ரூ.75,000-த்தை கடந்து புதிய உச்சம்
இந்த நிலையில், இன்றும் அதிரடியாக கிராமிற்கு 95 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 9,380 ரூபாய்க்கும், சவரனுக்கு 760 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 75,040 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து 75,000 ரூபாயை கடந்துள்ளதால், வரும் நாட்களில் என்ன ஆகுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் உச்சத்தில்
இதேபோல், வெள்ளியின் விலையும் குறைவதும், உயர்வதுமாக இருந்து, தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த 15-ம் தேதி கிராம் 125 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 16-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து 124 ரூபாய்க்கு விற்பனையானது. 17-ம் தேதியும் இதே விலையில் நீடித்த வெள்ளியின் விலை, 18-ம் தேதி ஒரு ரூபாய் உயர்ந்து, மீண்டும் 125 ரூபாயை எட்டியது.
தொடர்ந்து, 19-ம் தேதி மீண்டும் ஒரு ரூபாய் உயர்ந்த வெள்ளி, ஒரு கிராம் 126 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர், 20 மற்றும் 21-ம் தேதிகளில் அதே விலையில் நீடித்த நிலையில், 22-ம் தேதியான நேற்று கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, 128 ரூபாயை எட்டியது.
இந்த நிலையில், இன்று(23.07.25) மேலும் ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 129 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது, தங்கம் வாங்குவோரை கவலை அடையச் செய்துள்ளது.






















