விழுப்புரத்தில் வெறிநாய் அட்டகாசம்: ஒரே நாளில் 17 பேர் காயம்! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
விழுப்புரத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்த வெறிநாய்கடித்து 17 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

விழுப்புரம்: விழுப்புரத்தில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்து வெறி நாய் கடித்ததில் 17 பேர் காயமடைந்து மகாராஜபுரத்திலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
விழுப்புரத்தில் ஒரே நாளில் 17 பேரை கடித்த வெறிநாய்
விழுப்புரம் நகர புறபகுதியான லஷ்மி நகர், மகாராஜபுரம், மணி நகர் எம் கே குச்சிப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து சென்ற நபர்களை அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறி நாய் ஒன்று 17 பேரை கடித்துள்ளது. வெறி நாய்கடித்ததினால் காயமடைந்தவர்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற்றனர். இதில் நான்கு வயதானவர்களை அதிகப்படியாக நாய் கடித்ததினால் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலையில் நடந்து சென்றவர்களை வெறிநாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் சாலையில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடிவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். அதனை தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி கடித்த வெறி நாயினை நகராட்சி நிர்வாகத்தினர் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெறிநாய் கடி
வெறிநாய் கடி என்பது வெறிநாய்க்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் ஒரு நோய், இது பாதிக்கப்பட்ட நாய் அல்லது விலங்கின் கடியால் ஏற்படுகிறது. இது ஒரு தீவிரமான நோயாகும், மேலும் கடித்த உடனேயே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம்.
வெறிநாய் கடியின் அறிகுறிகள்:
காயத்தின் அருகே கூச்ச உணர்வு அல்லது வலி, காய்ச்சல், தலைவலி, களைப்பு, பசியின்மை, குழப்பம், மயக்கம், தசைப்பிடிப்பு, விழுங்குவதில் சிரமம், நீரைக்கண்டால் பயம் (hydrophobia).
வெறிநாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும். உடனடியாக மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளைப் போடவும். தேவைப்பட்டால், ஆன்டிவைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.
இதற்கு என்ன முதலுதவி செய்வது ?
குறைந்தது 15 நிமிடங்களுக்குக் காயத்தை சோப்புத் தண்ணீரால் கழுவ வேண்டும். வேகமாக விழுகின்ற குழாய் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. காயத்தின்மீது ஏதாவது ஒரு 'ஆண்டிசெப்டிக்'மருந்தைத் தடவலாம். ( எ-டு : பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான்).
தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும்
முடிந்தவரை காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடுமளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் 'ரேபீஸ் தடுப்புப் புரதம்' (Rabies immunoglobulin ) எனும் ஊசியைப்போட்டபிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வெறிநாய்க்கடி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம்.
வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியை எப்படி போட்டுக்கொள்ள வேண்டும்?
இந்த நோயை நான்கே ஊசிகளில் 100 சதவிகிதம் வரவிடாமல் தடுத்துவிடலாம். நாய் கடித்த அன்றே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள், 28-வது நாள் என 4 தவணைகள் வெறிநாய்க் கடி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகிறது.




















