மேலும் அறிய
Madurai Power Shutdown: மதுரையில் நாளை மின் நிறுத்தம் - எங்கன்னு தெரியணுமா? விவரம் உள்ளே
Madurai Power Shutdown: மதுரையில் நாளை (24.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மதுரையில் மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (24.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் செயற்பொறியாளர் அறிவிப்பு
மதுரையில் நாளை 24.07.2025 (வியாழக்கிழமை) அன்று 110/11 KV நரசிங்கம்பட்டி மற்றும் 110/11 KV தனியாமங்கலம் துணைமின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு வேலை நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 09:00 மணிமுதல் மதியம் 05:00 மணிவரை கீழ்கண்ட ஊர்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மதுரை கிழக்கு மின் செயற்பொறியாளர் இரா.கண்ணன் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் ஊர்களின் பெயர்கள்:
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையம்
முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வலச்சிக்குளம், நரசிங்கம்பட்டி.
தனியாமங்கலம் துணைமின் நிலையம்
கீழையூர், கீழவளவு, செம்மினிப்பட்டி, கொங்கம்பட்டி, முத்துச்சாமிபட்டி, தனியாமங்கலம், சாத்தமங்கலம், வெள்ளநாயக்கம்பட்டி, உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி, சருகுவலையபட்டி, பெருமாள்பட்டி, இ.மலம்பட்டி, கரையிப்பட்டி, கோட்டநத்தம்பட்டி, வெள்ளலூர் மற்றும் தர்மதானப்பட்டி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















