என்ன வேலக்காரியா மட்டுமே பாக்குறாங்க...சிறகடிக்க ஆசை கோமதி பிரியா என்ன இப்படி சொல்லியிருக்கார்
தமிழ் சீரியல்களைக் காட்டிலும் தெலுங்கில் தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டதாக சிறகடிக்க ஆசை கோமதி பிரியா கூறியுள்ளார்

யார் இந்த கோமதி பிரியா
தொலைக்காட்சி உலகில் கொடிகட்டி பறந்து வரும் சீரியலாக சிறகடிக்க ஆசை தொடர் இருந்து வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தொடர்ச்சியாக டி.ஆர்.பியில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது. தெலுங்கு , தமிழ் ஆகிய இரு மொழிகளில் இந்த தொடர் ஒளிபரப்பானது. பின் மக்களிடம் பரவலான வரவேற்பு கிடைத்தப் பின் மலையாளத்திலும் ஒளிபரப்பானது. மூன்று மொழிகளிலுமே மீனா கதாபாத்திரத்தில் நடிகை கோமதி பிரியா நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் பெரியளவிலான சீரியல் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் கணக்கை 7 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். அடிக்கடி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து தனது ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடியும் வருகிறார்
View this post on Instagram
மதுரையைச் சேர்ந்த கோமதி பிரியா முதலில் ஓவியா என்கிற சீரியல் மூலமாக அறிமுகமானார். சிறகடிக்க ஆசை தொடரில் மீனாவாக நடிக்கத் தொடங்கியது அவருக்கு பெரியளவில் அங்கீகாரத்தை கொடுத்தது. தற்போது தமிழ் , தெலுங்கு , மலையாளம் என பயங்கர பிஸியான நடிகையாக சீரியல் உலகில் வலம் வருகிறார் கோமதி பிரியா. சிறகடிக்க ஆசை தொடர்பான பேச்சி ஒன்றில் கோமதி பிரியா தமிழை விட தெலுங்கில் தனக்கு நல்ல கதாபாத்திரம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார்
என்னை வேலைக்காரியாக மட்டுமே பார்க்கிறார்கள்
பிற மொழிகளில் நடிப்பது குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டபோது கோமதி பிரியா இப்படி கூறியுள்ளார். "முதலில் நான் தமிழில் ஓவியா சீரியலில் நடித்தேன். அதன்பிறகு தான் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேர் என்னை தெலுங்கு அல்லது மலையாளம் பேசுபவர் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நான் பக்கா மதுரை பொண்ணு. எனக்கு ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாதபோதும் நான் மலையாளத்தில் நடிக்க சம்மதித்தேன். தமிழில் மட்டும்தான் என்னை பாவமாக வேலைக்கார பெண்ணாக பார்க்கிறார்கள். ஆனால் தெலுங்கில் விளையாட்டுத் தனமான ஜாலியான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்தார்கள். இங்கு நான் மற்றவர்களிடம் அடி வாங்குபவளாக இருப்பேன். ஆனால் அங்கு மற்றவர்களை அடிப்பவளாக இருப்பேன்.





















