மேலும் அறிய

Crime: ரூபாய் 1.89 கோடி மோசடி.. பிரபல இயக்குனர் பாண்டிராஜை ஏமாற்றிய துணை நடிகர்..! நடந்தது என்ன?

நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட இயக்குனர் பாண்டிராஜிடம் ரூ.1¾ கோடி மோசடியில் ஈடுபட்ட துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ். இவர், பசங்க, வம்சம், மெரினா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஆகும். தற்போது சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வரும் பாண்டிராஜ், அவ்வப்போது புதுக்கோட்டைக்கு வந்து செல்வது உண்டு. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜிடம் புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானார்.

இதையடுத்து, பாண்டிராஜ் தனது படங்களில் துணை நடிகர் வேடத்தில் குமாரை நடிக்க வைத்திருக்கிறார். குமார் புதுக்கோட்டையில் இருந்தபடி நில புரோக்கராகவும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பாண்டிராஜிடம் சிப்காட் மற்றும் புதுக்கோட்டையில் டி.வி.எஸ். கார்னர் அருகே நிலம் இருப்பதாகவும், அதனை வாங்கி தருவதாக கூறி அதற்காக பல லட்சம் பணம் பெற்றுள்ளார். இதுதவிர கடனாகவும், சொந்த செலவிற்காகவும் இயக்குனர் பாண்டிராஜிடம் பணம் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் சிப்காட் அருகே அவர் கூறிய நிலத்தை பத்திரம் பதிவு செய்த நிலையில், அந்த இடம் தொடர்பாக ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு இருப்பது தெரியவந்தது.

Crime: ரூபாய் 1.89 கோடி மோசடி.. பிரபல இயக்குனர் பாண்டிராஜை ஏமாற்றிய துணை நடிகர்..! நடந்தது என்ன?

1.89 கோடி மோசடி:

மேலும் இதேபோல் டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள நிலமும் வேறொரு நபருக்குரியது என தெரிந்தது. இதனால் இயக்குனர் பாண்டிராஜ் அதிர்ச்சியடைந்தார். நிலம் வாங்கி தருவதாக மற்றும் கடனாக, சொந்த செலவிற்காகவும் என மொத்தம் ரூ.1 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரம் தன்னிடம் மோசடி செய்தது அவருக்கு தெரியவந்தது. பணத்தை திருப்பி கேட்ட போது அவர் கொடுக்கவில்லை.

இதையடுத்து இந்த மோசடி குறித்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இயக்குனர் பாண்டிராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து இயக்குனர் பாண்டிராஜ் கூறுகையில், கைதான குமார் என்னிடம் நட்புடன் பழகி வந்தார். அவரை நம்பியே நான் பணத்தை கொடுத்தேன். ஆனால் கடைசியில் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க

Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 

அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
IND vs NZ Final: கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்

IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?

TN Education: கல்லூரி படிக்கும் போதே ரூ.50 ஆயிரம் வாங்கலாம் அரசு ஸ்கீம் இது தான்.. மிஸ் பண்ணாதீங்க !

Embed widget