ரூம் எடுத்து , மது போதையில் ஆண் நபருடன் இரவு முழுவதும் ஒன்றாக உறங்கிய பெண் - நடந்தது என்ன ?
வேலூரைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் பெண் தோழி உட்பட 2 நபர்கள் கைது.

சென்னையில் வேலூரை சேர்ந்த இளம் பெண்ணுக்கு, பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாட்ஜில் ரூம் எடுத்து , மது அருந்திய பெண்கள்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் விடுதியில், தங்கி வேலை செய்து வருகிறார். இவரது பெண் தோழியான பெரம்பூரைச் சேர்ந்த ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் 2 அறைகள் பதிவு செய்து விட்டு , மது அருந்த அழைத்ததின் பேரில், வேலூரைச் சேர்ந்த பெண் கடந்த 27.06.2025 அன்று , நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் லாட்ஜிற்கு சென்று , அங்கு அவரது பெண் தோழியுடன் மது அருந்தியுள்ளார்.
போதையில் ஆணுடன் ஒன்றாக உறங்கிய பெண்
இந்நிலையில் பெரம்பூரைச் சேர்ந்த பெண்தோழி , அவருக்கு தெரிந்த 2 ஆண் நண்பர்களை மேற்படி அறைக்கு வரவழைத்து , 2 ஆண் நபரை அறிமுகம் செய்துள்ளார். பின்பு அந்த 2 பெண் , 2 ஆண்களும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்பு வேலூரைச் சேர்ந்த பெண் , நண்பர்களுடன் அறையில் பேசிக் கொண்டு உறங்கியுள்ளார்.
பின்பு அதிகாலையில் எழுந்து பார்த்த போது , அவருடன் மனாசே என்பவர் அருகில் தூங்கிக் கொண்டு இருந்ததை கண்டறிந்து அவரையும் , பெண் தோழி உட்பட மூவரையும் சத்தம் போட்டு விட்டு , பின்பு 28.06.2025 அதிகாலை தனது சொந்த ஊரான வேலூருக்கு சென்றுள்ளார்.
பெண் தோழியின் நண்பரால் பாலியல் துன்புறுத்தல்
இந்நிலையில் , லாட்ஜில் நண்பர்களுடன் தங்கியிருந்த போது , பெண் தோழியின் நண்பரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தெரிய வரவே , அவரது பெண் தோழி மற்றும் பெண் தோழியின் நண்பர்கள் மீது வேலூர் மாவட்டம், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
குற்ற சம்பவயிடம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதி என்பதால் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு மாற்றப்பட்டு , போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீசார் நடவடிக்கை
W-1 ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த மனாசே ( வயது 29 ) மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழியான பெரம்பூரைச் சேர்ந்த 27 வயது பெண்ணையும் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி பெரம்பூரைச் சேர்ந்த பெண், மனாசே மற்றும் மற்றொரு ஆண் நண்பர் ஆகிய மூவரும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்தது தெரிய வந்தது. வழக்கில் தொடர்புடைய மற்றொரு தலைமறைவான நபர்களை பிடிக்க காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.





















