ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் தெய்வ திருமகள் சாரா...மாடர்ன் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா தற்போது இந்தியில் ரன்வீர் சிங் நடித்துள்ள 'துரந்தர்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

துரந்தர் ஃபர்ஸ்ட் லுக்
இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது. உரி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தை இயக்கிய ஆதித்யா தார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சஞ்சய் தத் , அக்ஷய் கண்ணா , ஆர் மாதவன் , அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ரன்வீ சிங் ஜோடியாக 20 வயதேயான சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.
யார் இந்த சாரா அர்ஜூன்
தனது ஒன்றரை வயதில் முதல் விளம்பரத்தில் நடித்தார் சாரா அர்ஜூன். தமிழில் விக்ரம் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . இப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டுக்களைப் பெற்றது. தொடர்ந்து சைவம் , சில்லு கருப்பட்டி , மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார் சாரா அர்ஜூன்.
RANVEER SINGH - JIO STUDIOS - ADITYA DHAR: 'DHURANDHAR' FIRST LOOK UNVEILS ON RANVEER'S BIRTHDAY – 5 DEC 2025 RELEASE... #JioStudios and #NationalAward-winning director #AdityaDhar have unveiled the explosive #FirstLook of action-thriller #Dhurandhar on #RanveerSingh's birthday… pic.twitter.com/6cw6ylJPt5
— taran adarsh (@taran_adarsh) July 6, 2025
ரன்வீர் சிங்கிற்கு தற்போது 40 வயதாகும் நிலையில் 20 வயதான சாரா அர்ஜூன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதம் செய்து வருகுறார்கள்.





















