ஓலா, ஊபர் பயணிகளுக்கு அதிர்ச்சி! புதிய கட்டண விதிகள்: இனி செலவு எகிறும்? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!,
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் (MVAG) 2025 என்ற புதிய சட்டங்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் வாடகை வண்டிகளான ஓலா மற்றும் ஊபர் பயணிகளை நேரடியாக பாதிக்கும் வகையில் மத்திய அரசு புதிய கட்டண விதிகளை அறிவித்துள்ளது.
புதிய சட்டம் என்ன?
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் (MVAG) 2025 என்ற புதிய சட்டங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, உச்ச நேரங்களில் வாடகை வண்டி ஒருங்கிணைப்பாளர்கள் இருமடங்கு வரை கட்டணத்தை வசூலிக்கலாம். இதற்கு முன், அதிகபட்சமாக 1.5 மடங்கு கட்டணமே வசூலிக்க அனுமதி இருந்தது.
அதேபோல், பீக் ஹவர் இல்லாத நேரங்களில், மொத்த கட்டணத்தில் 50% வரை குறைப்பு வழங்கலாம் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.
பயண ரத்து செய்தால் அபராதம்:
பயண முன்பதிவுக்குப் பின் பயணிகளை ஏற்ற செல்லாமல், ஓட்டுநரே பயணத்தை ரத்து செய்தால், ரூ.100க்கு மேல் கட்டணம் செலுத்தியிருந்தால், அதன் 10% அபராதமாக பயணிக்கப்போன நபருக்கு வழங்க வேண்டும் என்று விதி சொல்லுகிறது. அதேபோல், பயணிகள் தாங்களே முன்பதிவை ரத்து செய்தாலும், அபராதம் விதிக்கப்படும்.
மாநிலங்களுக்கு உத்தரவு:
இந்த புதிய விதிகள் உடனடியாக அமலில் வராது என்றும் மாநில அரசுகள் மூன்று மாதங்களில் திருத்தப்பட்ட விதிகளை வெளியிட வேண்டும். அந்த விதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளையும் சேர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
- கட்டண எவ்வளவு என்பதை மாநில அரசு நிர்ணயிக்கும்.
- குறைந்தது 3 கி.மீ.க்கு அடிப்படைக் கட்டணம் வரையறுக்கப்பட வேண்டும்
- மூன்று கி.மீ.க்கு குறைவாக பயணித்தால், மைலேஜ் கட்டணம் வசூலிக்க முடியாது.
- பிக்-அப் இடத்திலிருந்து டிராப் இடம் வரை தூரத்தின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும்.
- ஒவ்வொரு பயணிக்கும் குறைந்தது ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இந்த புதிய விதி அமலில் வந்தால்:
- பீக் ஹவர் நேரங்களில் பயணிக்கிறவர்களுக்கு செலவு அதிகரிக்கும்.
- ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு அதிக வருமான வாய்ப்பு.
- பயணிகள் பாதுகாப்பு மற்றும் நியாயமான கட்டண கட்டுப்பாடுகள் உறுதி செய்யப்படும்.
மத்திய அரசின் இந்த புதிய நடவடிக்கை, பயணிகளுக்கும், வாடகை வண்டி நிறுவனங்களுக்கும் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.






















