விஷ்ணு விஷால் மகளுக்கு 'மிரா' என பெயர் சூட்டிய ஆமிர் கான்...இதுதான் அர்த்தம்
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டார்

விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர் சூட்டிய ஆமிர் கான்
விஷ்ணு விஷால் மற்றும் ஜூவாலா கட்டா தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆவது பெண் குழந்தை பிறந்தது. இன்று ஹைதராபாதில் தனது மகளின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடினார் விஷ்ணு விஷால். தனது மகளுக்கு மிரா என்று பெயர் வைத்துள்ளார் விஷ்ணு விஷால். மிரா என்பதற்கு அளவுகடந்த அன்பு மற்றும் அமைதி என்று பொருள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான் கலந்துகொண்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ஆமீர் கானுக்கு நன்றி தெரிவித்து தனது மகளின் பெயரை அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால் " எங்கள் மகள் மிராவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இந்த நிகழ்விற்காக ஹைதராபாத் வரை வந்த நடிகர் ஆமிர் கானுக்கு எனது அன்பு. அவருடன் இதுவரையிலான உறவு ஒரு மேஜிக்கலான அனுபவமாக இருந்திருக்கிறது" என விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.
Introducing our MIRA...
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) July 6, 2025
A big hug to #AamirKhan sir for coming all the way to hyderabad to name our baby.
MIRA represents unconditional love and peace.
The journey with Aamir sir to this point has been a magical one...@Guttajwala 😍 pic.twitter.com/4ZVDiAcCbb
வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இந்தியா தொடர்ந்து, பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, ராட்சசன் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார்.
நீர் பறவை படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய துணை இயக்குனரும் தன்னுடைய தோழியான இயக்குனர் நட்ராஜின் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக, 2018-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.இதை தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ரஜினி மூலம் விஷ்ணு விஷாலுக்கு ஆரியன் என்கிற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷாலுக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அறிவித்துள்ளார்





















