மேலும் அறிய

ஆன்லைன் மோசடியில் சிக்கிய பேராசிரியை ; பகுதிநேர வேலை ஆசை காட்டி ஏமாற்றம்...! ரூ.9.83 லட்சம் மோசடி...

விழுப்புரம் பேராசிரியைக்கு இன்ஸ்டாகிராம் பகுதிநேர வேலை ஆசை காட்டி ரூ.9.83 லட்சம் மோசடி - சைபர்கிரைம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய போது, பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை நம்பி விழுப்புரத்தில் பெண் துணை பேராசிரியர் ஒருவர் ஆன்லைனில் ரூ.9.83 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.

ஆன்லைன் மோசடியில் சிக்கிய பெண் துணை பேராசிரியர்

விழுப்புரம், வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் விஜயபதி மகள் சரண்யா,34; தனியார் கல்லுாரி துணை பேராசிரியர். இவர் தனது மொபைலில் கடந்த 26 ஆம் தேதி இன்ஸ்டாகிராமை பயன்படுத்திய போது, பகுதிநேர பணி என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த லிங்கை தொட்டுள்ளார். இதையடுத்து மர்ம நபர் ஒருவர் அவர் அனுப்பும் வீடியோவை 'லைக்' செய்து அதை 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து அனுப்பினால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என கூறினார்.

இதை நம்பிய சரண்யா, அந்த மர்ம நபர் கூறியபடி செய்து ரூ.120 பெற்றார். தொடர்ந்து மர்ம நபர், சரண்யாவிற்கு ஒரு லிங்க்கை அனுப்பி சிறிய தொகையை முதலீடு செய்து 'டாஸ்க்' முடித்தால் அதிக லாபம் பெறலாம் என கூறினார். இதையடுத்து, அவர் தனக்கென யூசர் ஐ.டி., பாஸ்வேர்டை உருவாக்கி, மர்ம நபர் அனுப்பிய லிங்க்கிற்குள் சென்று ரூ.700 முதலீடு செய்து ரூ.910; ரூ.3 ஆயிரம் முதலீடு செய்து ரூ.4,800; திரும்ப பெற்றார்.

இதை நம்பியவர் தனது வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட 'Gpay ' மூலம் மர்ம நபர் கூறிய UPI., ஐ.டி.,களுக்கு, கடந்த 26 ம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை 16 தவணைகளில் மொத்தம் 9 லட்சத்து 83 ஆயிரத்து 130 ரூபாய் அனுப்பி டாஸ்க்கை முடித்தார். இதையடுத்து சரண்யாவிற்கு சேர வேண்டிய தொகையை தராமல் மர்ம நபர்கள் ஏமாற்றி வந்தனர். அப்போது அவருக்கு பணத்தை இழந்தது தெரிந்தது. இது குறித்து சரண்யா நேற்று விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பகுதி நேர வேலை என கூறி மோசடி

இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகுதி நேர வேலை, முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி இருவரிடம், 13.71 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், திம்மேநத்தத்தை சேர்ந்தவர் முரளி, 28; தனியார் நிறுவன ஊழியர். இவரது டெலிகிராம் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கலாம். அனுப்பும் லிங்க் கை 'கிளிக்' செய்து பதிலளித்தால் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் தெரிவித்திருந்தது. கிளிக் செய்து சிறிது பணம் பெற்றார்.

மேலும் அவர்கள் அடுத்து அனுப்பிய மெசேஜில் பகுதி நேர வேலையுடன், பண முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் லாபம் மற்றும் ஊதியம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கூறிய வங்கி கணக்குகளில், 8.71 லட்சம் ரூபாய் அனுப்பினார். அதன் பின் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இதேபோல் ஓசூர், மத்திகிரி ரூபிதா, 39, டெலிகிராம் பக்கத்தில் VVIP  குழுவில் இணைந்தார். அதில் முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என இருந்தது. அதை நம்பிய அவர், 5 லட்சம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். இருவரின் புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget