மேலும் அறிய

Madurai ; ஒரு பக்கம் எய்ம்ஸ் மற்றொரு பக்கம் டைடல் பார்க்... டாப் கியரில் மதுரை பணிகள் நடக்கிறது !

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, டைடல் பார்க், எய்ம்ஸ் மருத்துவமனை என பணிகள் அடுத்தடுத்து வேகமெடுத்து வருகிறது.

பொங்கல் முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி செயல்படும்  - நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ் தகவல்.

மதுரை டைடல் பார்க்
 
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைடல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து மாட்டுத்தாவணி பகுதியில், டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதே வேளையில் மதுரை தோப்பூர் பகுதியில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் 2027-ஆம் ஆண்டு கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்  தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
 
மதுரை எய்ம்ஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுரை எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்தாராவ், விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர், தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார், அதிமுக ராஜ்யசபா எம்பி சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி அனுமந்த ராவ்..,”எய்ம்ஸ் தொடர்பான இந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய துணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் 8 பேர் ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எய்ம்ஸ் நான்காவது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் வாடகைக்கு கட்டடங்கள் எடுக்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணி விரைவாக தொடங்கப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதே போல் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடக்கக்கூடிய பணிகள் குறித்து ஆய்வும் நடைபெற்றது.
 
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி
 
தற்போது மருத்துவக் கல்லூரிக்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், வரும்  2026 ஜனவரி மாதம் தை பொங்கல் தினத்தன்று எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி புதிய கட்டடத்தில் செயல்படும். இதன் காரணமாக ஜனவரி மாதத்திற்குள் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான ஆய்வகங்கள் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் முதற்கட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 150 படுக்கைகளுடன் அனைத்தும் செய்து முடிக்கப்படும். 2027 ஆம் ஆண்டிற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவு பெற்று செயல்படுத்த தொடங்கும். மாதந்தோறும் கட்டடப் பணிகள் குறித்த புகைப்படங்களை வெளியிடும்படி ஒப்பந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.
 
இதனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, டைடல் பார்க், எய்ம்ஸ் மருத்துவமனை என பணிகள் அடுத்தது தயாராகி வருகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
ABP Premium

வீடியோ

”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு பல்டி அடித்த முக்கிய கட்சி.? தட்டி தூக்கினாரா எடப்பாடி.?
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ICC BAN: ”நீங்க கெளம்புங்க, நாங்க வேற டீம் வெச்சு T20WC விளையாடிக்கிறோம்” வங்கதேசத்திற்கு ஐசிசி வார்னிங்
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
ECI TN Voter List: அட்ரா சக்க..! வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
TTV in AIADMK alliance: முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்.! திடீர் பல்டி அடித்த டிடிவி தினகரன்- பாஜக கூட்டணியில் அமமுக.?
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
MG Majestor: வந்தா தெறிக்கனும்..! மேஜிக் காட்டும் மெஜஸ்டர் - எம்ஜியின் ஃப்ளாக்‌ஷீப் மாடல் - விலை, வெளியீடு..
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
Parasakthi: “திரையில் என்னை பார்த்த மாதிரி இருக்கு”.. பராசக்தி பார்த்த சீமான்.. கலகல விமர்சனம்!
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயிடம் சிபிஐ விசாரணை, சென்னையில் போக்குவரத்து நெரிசல், தண்ணி காட்டும் தங்கம் - தமிழகத்தில் இதுவரை
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
TVK Vijay: டெல்லியில் தவெக தலைவர் விஜய்.. இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Embed widget