மேலும் அறிய

சாலையில் சுற்றி திரிந்த கரடி; அச்சத்தில் உறைந்துள்ள நெல்லை மக்கள்

வனத்துறையினர் கரடிகள் நடமாட்டத்தை கண்டறித்து அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.  

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, யானை, கரடி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதமாக பாபநாசம் அருகேயுள்ள கோட்டைவிளை பட்டி, அகஸ்தியர்புரம், சிவந்திபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றையாகவும், ஜோடியாகவும் கரடிகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன. கரடிகள் இரவு நேரங்களில் உலா வரும் வீடியோக்களும் தொடர்ச்சியாக சமூகவலைத் தலங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இதனால் பாபநாசம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் இரவு கோட்டைவிளைபட்டி நடுத்தெருவிலுள்ள குமார் என்பவரின் வீட்டில் முன்பகுதியில் இரண்டு கரடிகள் ஜோடியாக சுற்றி திரிந்துள்ளன. இந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பொழுது மெயின் சாலையில் ஒற்றை கரடி ஒன்று உலா வந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்லும் பயணிகள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்களை இந்த சாலையில் கரடி நிற்கிறது. பார்த்து வாருங்கள் என்று சத்தம் எழுப்பினர். பின் அங்கிருந்த கரடி சாலையில் இருந்து தெரு வழியாக உள்ளே சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதலங்களில் வெளியிட்டு  உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து கரடியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே ஆம்பூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, மூலைக்கரைப்பட்டி என பல்வேறு இடங்களில் கரடி தாக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பும் விடுமுறை தினத்தன்று அதிகம் சுற்றுலா பயணிகள் குவியும் மணிமுத்தாறு பகுதியில் உள்ள சாலையில் பட்டப்பகலில் நடந்து சென்ற கரடியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்த நிலையில் கரடி அங்குள்ள மரக்கிளையில் தஞ்சம் புகுந்ததோடு 15 மணி நேரம் கழித்து இரவு 1 மணிக்கு மேல் மரத்திலிருந்து கீழே இறங்கி சென்ற சம்பவமும் அரங்கேறியது. இதே போல தொடர்ச்சியாக தற்போது கரடிகள் ஊருக்குள் சுற்றி திரிவதோடு மக்களை அச்சுறுத்தி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. எனவே வனத்துறையினர் கரடிகள் நடமாட்டத்தை கண்டறித்து அவற்றை கூண்டு வைத்து பிடித்து வனத்திற்குள் விட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஹாப்பி! இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. தேதியை குறிச்சுக்கோங்க மக்களே
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
ஸ்டாலின், உதயநிதியிடம் முறையிட்டும் பயனில்லை.. 7 வருஷம் போலீஸ் வேலைக்கு போராடும் திருநங்கை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Superman Review: சூப்பர் மேனை காப்பாற்றினாரா ஜேம்ஸ் கன்? டிசி யுனிவெர்ஸ் தப்பி பிழைக்குமா? ட்விட்டர் விமர்சனம்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
Maruti Suzuki Cars: எவனாலயும் முடியாது..! அடிமாட்டு விலைக்கு 3 கார்கள், சிம்பிளா 34 கிமீ மைலேஜ் - சிட்டிக்கு இதுதான் பெஸ்ட்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
IND Vs ENG Lords Test: ”போர் அடிக்குது, பேஸ்பால் கிரிக்கெட் எங்க?” - சொந்த மண்ணிலேயே இங்கி., கலாய்த்த இந்திய கேப்டன்
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
Joe Root: லார்ட்ஸின் ராஜா ஜோ ரூட்.. சத மழையும், ரன்மழையும்தான்.. வரலாறை பாருங்க ப்ரோ!
தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன் - சீமான் பேச்சு !
தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன் - சீமான் பேச்சு !
Embed widget