Tamilnadu Roundup: வீட்டிற்கே வரும் ரேஷன் பொருட்கள்.. தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாட்டில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் - 100 டிகிரி செல்சியஸ் உயரும் என எச்சரிக்கை
வீடு தோறும் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விநியோகிக்க மத்திய அரசு முடிவு
எல்.ஐ.சி. பங்குகளை மீண்டும் விற்க முடிவு செய்தது மத்திய அரசு - பயனாளர்கள் அதிர்ச்சி
சிங்கபெருமாள் கோயில் பராமரிப்பு பணி; சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில்சேவை பாதிப்பு
உலக பொதுமறை திருக்குறள் என்ற நூலை வெளியிடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடன் வசூலில் கடுமையான விதிகளை பின்பற்றக்கூடாது; வங்கி அல்லாத நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
பொள்ளாச்சி அருகே சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானை
அசாமில் மண்சரிவு; கோவையில் இருந்து அசாம் செல்லும் கோவை - சில்சார் ரயில் சேவை ரத்து
மு.க.ஸ்டாலினின் குடும்பம்தான் ஓரணியில் உள்ளது; திமுக-விற்கு மக்கள் ஆப்பு வைப்பார்கள் - ராஜேந்திர பாலாஜி
ஜெயங்கொண்டம் அருகே ஆற்று வாய்க்கால் உடைந்து நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
அன்புமணி, ராமதாஸ் மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வர பாமக மூத்த நிர்வாகிகள் தீவிரம்





















