மேலும் அறிய

தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன் - சீமான் பேச்சு !

நாங்கள் கருப்பாக இருப்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லை. திருமால், சிவன் கருப்பு நிறத்தில் தானே உள்ளனர், அவர்களை உயர்த்தி என்னை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள். - என எருமைமாட்டுக்கு வருத்தப்பட்ட சீமான்.

மேய்ச்சலுக்கு சென்ற மேய்ப்பரை வனத்துறையினர் தள்ளிவிட்ட தேனி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தடையை மீறி மேச்சலுக்கு செல்லும் போராட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஈடுபட உள்ளேன் - சீமான் அறிவிப்பு.

ஆடுமாடுகள் - மாநாடு
 
மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்றது. நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். மேடையின் முன்பாக இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட நாட்டின மாடுகள் மற்றும் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் எருமை மாடுகள் ஜல்லிக்கட்டு மாடுகள் செம்மறி கடா உள்ளிட்டவைகளை நிறுத்தி வைத்து, அதன் முன்பாக சீமான் உரையாற்றினார். ஆடு மாடுகளுக்கு பின்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். மாநாடு தொடங்கியவுடன் ஆடு மாடுகள் மாநாடு தொடர்பாக 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
 
ஆடு - மாடு மாநாட்டில் சீமான் உரை
 
பின்னர் மேடையின் முன்பாக நின்ற ஜல்லிக்கட்டு காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாநாட்டு உரையை தொடங்கினார் சீமான்...,” மாநாடு தொடங்கி உரையாற்றிய சீமான் நான் ஆடு மாடுகளின் உடைய எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசுகிறேன்... எனக்கூறி தொடங்கினார். ”எங்களிடம் இருந்து மேய்ச்சல் நிலத்தையே திருடுவதை எப்படி ஏற்பது. நாடு உங்களோடு என்றால் எங்களோடு காடு இல்லை, உங்களுக்கு பால் இருக்கிறது. எங்களுக்கு புல் இல்லை. இந்தியாவில் தான் 24ஆயிரம் கோடி மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்கிறார்கள். ரத்தத்தை உறுக்கி உங்களுக்கு பாலாக தருகிறோம், எங்களை நம்பி தாய்மார்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
 
மாடுகள் இல்லாமல் பால் எப்படி
 
பாலில் பொருளாதார தற்சார்பு என பிரதமர் பேசுகிறார்., 1லட்சத்தி 38ஆயிரத்தி 78 கோடி வருமானம் கிடைக்கின்றது. 50ஆயிரம் கோடிக்கு சாராயம் விற்று தாலி அறுக்கிறீர்கள், பொருளாதாரம் எங்கு உள்ளது என தெரியாத மூடர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர். இங்கு ஆவின் பால் அரசு விற்கிறது., பால்வளத்துறை, கால்நடைத்துறை எதற்காக? ஆடு, மாடு இல்லாமல் பால் எப்படி மக்களிடம் விற்பார்கள். கால்நடை பற்றி கவலையேபடாத துறை கால்நடைத்துறை. காலுக்கு செருப்பு தோல், தோளில் பைக்கு தோல், நனையாத மேலாடை எங்கள் தோல். ஆனால் எங்களுக்கு சாப்பிட வைக்கோல் இல்லை... மனிதர்களே! இது நான் பேசல முன்னாள் நிற்பவர்களின் மனக்குரலை எடுத்துவைக்கிறேன்.
 
தடை ஏற்புடையதில்லை
 
பால், தயிர், வெண்ணைய் வேண்டும்.. ஆனால் எங்களுக்கு உணவு இல்லை.  நாங்கள் போஸ்டரையும், நெகிழியை திங்கும் நிலை உள்ளது. மேகமலை மலையடிவாரங்களில் காப்புகடுகள் வனவிலங்குகள் சரணாலயம் புலிகள் காப்பாகம் ஆடுமாடு மேய தடை என கூறி காடுகளை பறித்துகொண்டார்கள். சமவெளியில் மேய எங்கு இடம் உள்ளது. மலையில் சென்று நாங்கள் மேய்வதில் என்ன பிரச்சனை, நாங்கள் இன்றுதான் மேய தொடங்குகிறோம், இப்போது மட்டும் எப்படி தடைபடுகிறது, தண்ணீர் சுனைகள் கலங்கடிக்கிறோம் என்கிறீர்கள் நாங்கள் நீச்சல் போட்டிக்கா செல்கிறோம், மேய்ச்சலுக்கு தடை ஏற்புடையதாக இல்லை.
 
கேரளாவிற்கு தமிழக வளம்?
 
கல்குவாரி என கூறி மலைகளை அழிக்கிறீர்கள். கல்குவாரியை உடைத்து பிரிக்கும் போது, வனவிலங்குகளை பற்றி கவலைப்படாத நீங்கள், தாயின்மார்பை கறியாக ஆக்கி சாப்பிட நினைக்கிறீர்கள். நாங்கள் மேய்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு வரும் என கூறுவது கேவலம். கேரளாவில் மலையை தொடவில்லை, ஆனால் அங்கு துறைமுகம் கட்ட கன்னியாகுமரியில் கற்களை உடைத்து எடுக்க அனுமதி கொடுத்தது யார்?
 
நாங்கள் இல்லாத புரட்சி ஏது?
 
வாரம் ஆனால் நெஞ்ச எலும்பு கறி கேட்பது, கறி, பால் எங்கிருந்து வரும்; ஆடுமாடு மேய்ப்பது அவமானமா முல்லை நில மாயோன், திருமாலும், பெருமாலும், கண்ணன்,  நபிகள், இயேசு எங்களை மேய்த்தார்கள். எங்களை இழிவுபடுத்துவதாக கூறி அவர்களை இழிவுப்படுத்துகிறீர்களா? நாங்கள் யார் உங்களோடு வாழ்வோடு பிரிக்கமுடியாத இணைந்த உயிர்கள் நாங்கள். ஆடுமாடுகள் எங்களுக்கு விழா கொண்டாடியவன் தமிழன் தான்; காரணம் உங்களுக்கு தோளோடு தோள் வைத்து இருந்தோம்; எங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள். ரசாயன உரத்திற்காக  மாடுகளை கொல்ல நினைத்து கொன்றார்கள்; பசுமைப்புரட்சி, வெண்மை புரட்சி என பேசுகிறீர்கள் நாங்கள் இல்லாத புரட்சி ஏது?
 
எது தரமான பால்
 
தரமற்ற பாலை ஏ1 என ஒன்றென்னனும், தரமான பாலை ஏ2 ரெண்டு என்றீர்கள்; இன்றும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்யவில்லை. பால் மட்டும் தான் முழு உணவு , பால் சாப்பிட்டால் மலம் வரும் ஆனால் ஜூஸ் சாப்பிட்டால் வராது. பால் முழு புரதசத்து உள்ள உணவு, பால் என்பது முழு உணவு, பால் இருக்கும் நாடு பசியை சந்திக்காது, இதனை தெரியாமல் படிப்பது ஏன். டாக்டர்கள் பால், முட்டை, கீரை சாப்பிடுங்கள் என்பார் அது எங்கிருந்துவரும்? இது புரியாத கூட்டத்திலயே பேசி பயன் என்ன உள்ளது.
 
சாராயம் ஊற்றுவதற்கு அரசு வேலை
 
எருமை மாட்டுக்கு ஒரு வருத்தம்.. எந்த அயோக்கியன் தப்பு பண்ணலும் என் பெயரை சொல்லி ஏன் திட்டுகிறீர்கள. அவ்வளவு கேவலமா போய்விட்டேனா நான். திருமால், சிவன் கருப்பு நிறத்தில் தானே உள்ளனர் அவர்களை உயர்த்தி என்னை ஏன் இழிவுபடுத்துகிறீர்கள். இங்கு மாநாட்டில்  ஆடுகள் நிறைய பங்கேற்பதாக இருந்தது மழையால் அவர்களால் வர இயலவில்லை. எந்த விருந்தில் எங்கள் கறி இல்லாமல் எங்கு உள்ளது. எலும்பு இல்லாத சுக்கா பக்காவாக சாப்பிடுகிறீர்கள். ஆடுமாடு அவமானம் என்றால் எதற்காக பால் தயிர் சாப்பிடுகிறீர்கள் ஆடுமாடு மேய்ப்பது அரசு பணி என்றால் சிரிக்கீறிர்களே.. சாராயம் ஊத்திகொடுப்பதை அரசு வேலையாக பார்க்கும் நீங்கள் ; பால் தயிர் இறைச்சி கொடுப்பவர்களை எங்களை மேய்ப்பது இழிவா? கால்நடைக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அரசு மருத்துவர்கள். ஆனால்  ஆடு மேய்ப்பவர்கள் அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா? சாப்டுவேரில் வேலை செய்தாலும் சாப்பிட்டுதான் வேலை செய்ய வேண்டும்.
 
தொழில் அல்ல, வாழ்வியல் முறை
 
ஆடுமாடுகளை பற்றி கவலைப்படாத நீங்கள் ஆவின் நடத்துவது ஏன்? ஆவின் பாக்கெட்டில் தங்கிலிஸ்சில் உள்ளது. ஆவின் பாக்கெட்டில் மாட்டின் படத்திற்கு பதிலாக ஸ்டாலின் கருணாநிதியின் படம் இருந்தது. நான் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது அகற்றப்பட்டுவிட்டது. ஆடு வளர்ப்பதுது அவமானம் என்றால் ஏன் பால் குடிக்கிறீர்கள்; விவசாயிகள் தான் சிற்றூர்களின் பொருளாதாரம். வேளாண், மீன்பிடித்தல் இழிவு, பனை குலத்தொழில் என்றால , உட்கார்ந்து திண்டு சாவது உங்கள் குலத்தொழிலா?  நாங்கள் செய்வது தொழில் அல்ல, வாழ்வியல் முறை.
 
தடை மீறி மேய்ச்சலுக்கு செல்வேன்
 
ஆகஸ்ட் 3 ஆம் தேதி நானே தடையை மீறி தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் மேய்ச்சலுக்கு செல்வேன், எங்கு தடை செய்தார்களோ, எங்கு மேய்க்க சென்றவரை வனக்காவலர் தள்ளினாரோ அதே இடத்தில் மாட்டை ஓட்டி  செல்வேன். பசுமாதா நாங்கள் கேட்கிறோம். என கூறி பேசிய சீமான் எங்கள் மூத்திரத்தை குடித்துமா உங்களுக்கு அறிவில்லை... என நான் சொல்லவில்லை பசுமாதா சொல்கிறது என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான வழிகாட்டு நெறிமுறை- என்னென்ன தெரியுமா.?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான வழிகாட்டு நெறிமுறை- என்னென்ன தெரியுமா.?
Heavy Rain: 12 மாவட்டங்களை அலற விடப்போகுது மழை.!எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
12 மாவட்டங்களை அலற விடப்போகுது மழை.! எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
பள்ளிக் கல்வியில் புரட்சி! பாடத்திட்டக் குழுவில் விளையாட்டு வீரர் அஸ்வின், இஸ்ரோ தலைவர்!- முழு லிஸ்ட்
பள்ளிக் கல்வியில் புரட்சி! பாடத்திட்டக் குழுவில் விளையாட்டு வீரர் அஸ்வின், இஸ்ரோ தலைவர்!- முழு லிஸ்ட்
MK STALIN: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.! தேர்தலில் தோற்றால் அவ்வளவு தான்- மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.! தேர்தலில் தோற்றால் அவ்வளவு தான்- மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?
Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி
Madhampatti Rangaraj  | ’’அது கட்டாய கல்யாணம்!பணத்துக்காக இப்படியா?’’ மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் DNA TEST-க்கு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான வழிகாட்டு நெறிமுறை- என்னென்ன தெரியுமா.?
பொதுக்கூட்டம் நடத்த 20 லட்சம் டெபாசிட்.! வெளியான வழிகாட்டு நெறிமுறை- என்னென்ன தெரியுமா.?
Heavy Rain: 12 மாவட்டங்களை அலற விடப்போகுது மழை.!எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
12 மாவட்டங்களை அலற விடப்போகுது மழை.! எங்கெல்லாம் தெரியுமா.? வானிலை மையம் அலர்ட்
பள்ளிக் கல்வியில் புரட்சி! பாடத்திட்டக் குழுவில் விளையாட்டு வீரர் அஸ்வின், இஸ்ரோ தலைவர்!- முழு லிஸ்ட்
பள்ளிக் கல்வியில் புரட்சி! பாடத்திட்டக் குழுவில் விளையாட்டு வீரர் அஸ்வின், இஸ்ரோ தலைவர்!- முழு லிஸ்ட்
MK STALIN: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.! தேர்தலில் தோற்றால் அவ்வளவு தான்- மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.! தேர்தலில் தோற்றால் அவ்வளவு தான்- மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை
Volkswagen: ரூ.3 லட்சம்.. சலுகைகளை அள்ளி வீசிய ஃபோக்ஸ்வாகன் - எந்தெந்த கார்களுக்கு? டாப் மாடல் என்ன?
Volkswagen: ரூ.3 லட்சம்.. சலுகைகளை அள்ளி வீசிய ஃபோக்ஸ்வாகன் - எந்தெந்த கார்களுக்கு? டாப் மாடல் என்ன?
8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
Job Alert: 8,000 பேருக்கு வேலை.! இன்டர்வியூக்கு வந்தாலே போதும்- இளைஞர்களுக்கு ஜாக்பாட்
இந்த படிப்புகளில் தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு பாடம் அறிமுகம்; யாருக்கெல்லாம்? என்ன பயன்?
இந்த படிப்புகளில் தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு பாடம் அறிமுகம்; யாருக்கெல்லாம்? என்ன பயன்?
Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
Embed widget