மேலும் அறிய

பெண்கள் கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறைகள்..! வெளிவந்த உண்மை..! நடந்தது என்ன?

”இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வகுப்பறையில் இரத்தக்கறைகள்

நெல்லை பழைய பேட்டை பகுதியில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 15க்கும் மேற்பட்ட பாட பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 4,500  மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு  நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்திலிருந்து ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்த நிலையில் இக்கல்லூரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இளங்கலை வணிகவியல் பாடப் பிரிவுக்கான வகுப்பறையில் ரத்தக் கறைகள் சிந்தி கிடந்ததைக் கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியர்களிடம் தகவலை தெரிவித்தனர். அதன்படி, கல்லூரி நிர்வாகம் சார்பில், பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்திலிருந்து தடயங்களைச் சேகரித்தனர். குறிப்பாக, வகுப்பறையில் சிந்திக் கிடந்த ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறையினர்

தொடர்ந்து அந்த ரத்தக்கறைகள் மனிதர்களுடையதா அல்லது விலங்குகளுடையதா என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது. முதலில் விலங்களுடையதாக இருக்கக்கூடும் என்று சொல்லப்பட்ட  நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியது. அதில் கல்லூரி வகுப்பறையில் ஏதோ நடந்துள்ளது என்பது வீடியோ  காட்சிகள் மூலம் பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக வகுப்பறையில் பெஞ்சிற்கு கீழே இரத்த கறைகள் அதிகம் இருந்த நிலையில் அதனை பேப்பரால் துடைத்து அங்குள்ள குப்பைக் கூடையில்  போடப்பட்டிருந்ததோடு அங்குள்ள ஸ்விட்ச் போடுகளிலும் இரத்த கறைகள் படிந்திருந்தது. அதன்பின்பு அது மனிதர்களுடையதாக இருக்கக்கூடும் என்றும், அப்படியென்றால் அங்கு நடந்தது என்ன என்பது குறித்தும் உண்மையான தகவல் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் கட்டிட வேலை பார்த்து வரும் காரைக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை பிடித்து விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில், விக்னேஷ் ஒருதலைக்காதல் விவகாரத்தில் தன்னைத்தானே பிளேடால் கையை வகுப்பறையில் வைத்து அறுத்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.

உண்மை வெளிவந்தது எப்படி?

ரத்தக்கறை கிடப்பதாக தகவல் கிடைத்த  போலீசார் கல்லூரி முழுவதும் விசாரணை நடத்தினர். குறிப்பாக, அனைத்து வகுப்புகளுக்கும் சென்று மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.  ரத்தக்கறை கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய நாள் ஞாயிறு விடுமுறை என்பதால், அன்று மாணவிகள் வகுப்பறையில் இருக்க வாய்ப்பில்லை. எனவே, வேறு நபர்கள் உள்ளே வந்தார்களா என்பதையும் ஆய்வு செய்தனர். அப்போது தான் கல்லூரியில் கட்டிட வேலை நடந்து வருவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும், கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ள நபர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தபடி வேலை செய்து வந்துள்ளனர். அப்படியென்றால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இது போன்று நடந்திருக்கலாம் என விசாரணையை துவக்கினர். பின்னர், கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்த அனைவரிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தினர். அதில், விக்னேஷ் என்ற இளைஞரின் கையில் காயம் இருந்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், ரத்த மாதிரிகள் மதுரைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதன் முடிவுகளும் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

ஒரு தலைக்காதலால் சிந்திய இரத்தம்:

அதன்படி, வகுப்பறையில் சிந்திக் கிடந்தது மனிதர்கள் ரத்தம் தான் என்பது உறுதியானது. எனவே, ரத்த மாதிரி என்ன வகையைச் சேர்ந்தது என்பதை போலீசார் தெரிந்து கொண்டனர். அதன் பிறகு விக்னேஷ் ரத்த மாதிரியை எடுத்து சோதித்த போது, இரண்டும் ஒத்து போனதால் விக்னேஷை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் வீடியோ காலில் பேசியபோது, அந்த பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் மன விரக்தியில் பிளேடால் தன்னைத்தானே கையை அறுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் விக்னேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விக்னேஷ் காதலித்த பெண் யார் என்பதையும் விசாரித்து வந்த நிலையில் அப்பெண் ராணி அண்ணா மகளிர் கல்லூரியைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தலைக்காதலால் கட்டிட வேலை பார்க்கும் இளைஞர் கல்லூரி வகுப்பறையில் கையை பிளேடால் கிழித்து இரத்தம் சிந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget