Karthigai Deepam: கார்த்திக் மீது திருட்டுப் பழி.. சிவனாண்டியுடன் மோதும் சந்திரகலா - என்ன நடக்கப்போகிறது?
கார்த்திக் மீது சந்திரகலா திருட்டுப் பழி போட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சந்திரகலா வீட்டிலிருந்து பணத்தை திருடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக் மீது பழிபோடும் சந்திரகலா:
அதாவது சூலையில் வேலை செய்பவர்கள் சிலர் வீட்டுக்கு வந்து புதிய சூலை ஆரம்பிக்க கொஞ்சம் பணம் வேண்டும் என்று கேட்க சாமுண்டீஸ்வரி பணத்தை எடுப்பதற்காக உள்ளே செல்கிறாள்.
சந்திரகலா ஏற்கனவே இந்த பணபப்பையை திருடிய நிலையில் சாமுண்டீஸ்வரி பணத்தை காணவில்லை என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சந்திரகலா எனக்கு ஒருத்தர் மேல சந்தேகமா இருக்கு டிரைவர் ராஜா தான் பையை எடுத்து இருக்கணும் என பழி போடுகிறாள்.
சந்திரகலா - சிவனாண்டி மோதல்:
இதைத்தொடர்ந்து ரேவதி கார்த்திக்கு சப்போர்ட் செய்து பேச சந்திரகலா ஷாக் ஆகிறாள். மயில்வாகனம் யார் அதிகமா பணம் கொடுக்குறாங்களோ அவங்கதான் ஊர் தலைவராக முடியும் என்று சொல்கிறான். பிறகு சாமுண்டீஸ்வரியிடம் பேசி தேர்தலில் நிற்க சம்மதிக்க வைக்கிறான்.
சாமுண்டீஸ்வரியை எதிர்த்து நிற்க சிவனாண்டி தேர்தலில் நாமினேஷன் செய்ய அங்கே சாமுண்டீஸ்வரி வர இருவருக்கும் இடையே ஒரு சவால் உருவாகிறது. பிறகு துர்காவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர சந்திரகலா இதை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறாள்.
உடனே சிவனாண்டியை சந்தித்து துர்காவை வீட்டை விட்டு ஓட வச்சுட்டா.. உன்னையே பாத்துக்க முடியாத சாமுண்டீஸ்வரி எங்கே ஊரை பாத்துக்க போறாங்க என்று சொல்லி தேர்தலில் நிற்பதை தடுத்து விடலாம் என்று கணக்கு போடுகிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















