(Source: Matrize IANS)
Chennai Free Parking: சென்னை மக்களே நோட் பண்ணுங்க; வகனங்களுக்கு இப்ப பார்க்கிங் கட்டணம் இல்ல - மாநராட்சி அறிவிப்ப பாருங்க
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அது எவ்வளவு நாளைக்கு தெரியுமா.?

சென்னையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் நிறைவடைந்ததால், இனி கட்டணமில்லாமல் மக்கள் வாகனங்களை நிறுத்தலாம் என அறிவிக்கப்பட்டுளளது. ஆனால், அது நிரந்தரமல்ல. விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு என்ன.?
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வகன நிறுத்த கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் நேற்றுடன்(20.07.25) முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய அல்லது மறு ஒப்பந்தத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், மாநகராட்சி சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் காலம் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், எந்தவித கட்டணமும் இல்லாமல், இன்றிலிருந்து நிறுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண வசூல் தொடர்பாக புகார்கள் இருந்தால், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் குறித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் பார்க்கிங் வசதி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பெரும் பிரச்னைக்குரிய விஷயமாக உள்ளது வாகன பார்க்கிங். சென்னையின் பல முக்கிய பகுதிகளில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், பல்வேறு வகைகளில் இடையூறு ஏற்பட்டதால், அதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினா, செம்ழிப் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் பார்க்கிங் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த பகுதிகளை பார்வையிட வருபவர்கள் மட்டுமல்லாமல், அந்த பகுதியை சுற்றியுள்ள பொதுமக்களும் தங்கள் கார்கள், இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்தி வருகின்றனர்.
அங்கு கட்டணம் வசூலிக்கும் பொறுப்பு, தமிழ்நாடு முன்னாள் படை வீரர் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த ஒப்பந்தம் நேற்று(20.07.25) முடிவடைந்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை, பொதுமக்கள் எந்தவித கட்டணமும் இன்றி தங்களது வாகனங்களை, மாநகராட்சி பார்க்கிங்கில் நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகரித்த வாகனங்களால் பிரச்னையான பார்க்கிங்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், தற்போது மக்கள்தொகை கிட்டத்தட்ட 2 கோடிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், வாகனங்களும் லட்சக்கணக்கில் பெருத்துவிட்டன.
சென்னையில், பொது போக்குவரத்துகளாக பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளது. இவைகளில் லட்சக்கணக்கானோர் தினமும் பயணித்தாலும், அதற்கு ஈடான அளவில் சொந்த வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.
இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவை அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளதால், சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரில் ஒருபுறம் ஏற்படுகிறது என்றால், அதற்கும் மேலாக பார்க்கிங் பிரச்னை தலைவிரித்தாடுகிறது.
இந்த ஆண்டு கணக்குப்படி, சென்னையில் கார்களின் எண்ணிக்கை கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. காரே இப்படி என்றால், இருசக்கர வாகனம் பற்றி கேட்க வேண்டுமா.? அதைவிட அதிகமாகத்தான் இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், சில ஆண்டுகளாக புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. ஆனால், தனி வீடுகள், அதிலும் பார்க்கிங் வசதி இல்லாத சிறிய வீடுகளில் உள்ள கார்களை, சாலை ஓரத்தில் தான் நிறுத்துகிறார்கள். இதனால், போக்குவரத்து நெரிசல், துப்புரவுப் பணி போன்றவற்றிற்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தான், மாநகராட்சி சார்பில், பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





















