Bengaluru Traffic: “தோழி துபாய்க்கே போய்ட்டா! நான் இன்னும் வீட்டுக்கு போகல” – வைரலாகும் பெங்களூரு பெண் பதிவு!
பெங்களூர் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ, இதுவரை 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

பெங்களூருவில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெங்களூரு மீண்டும் போக்குவரத்து பிரச்சனைக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.
பெங்களூர் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 வினாடிகள் கொண்ட ஒரு வீடியோ, இதுவரை 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த பெண் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்துப் பேசுகிறார். இந்த வைரல் வீடியோ ஒரு மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.
உணவு மற்றும் பயண வலைப்பதிவர்களான பிரியங்கா மற்றும் இந்திராயானி ஆகியோர் பகிர்ந்து கொண்ட வீடியோவில், "துபாய்க்கு செல்வதற்காக என் தோழியை பெங்களூரு விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வீட்டிற்கு கிளம்பினேன். அவள் துபாய்க்கே சென்று விட்டாள். ஆனால் நான் இன்னும் பெங்களூரு போக்குவரத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஒரு பயனர் கூறுகையில், “பெங்களூருவில் 1 கி.மீ காரில் செல்ல 3 மணி நேரம் ஆகும். ஆனால் நடந்து சென்றால் 1 கி.மீ பயணத்தை கடக்க 10 நிமிடங்கள் தான் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
மற்றொரு பயனர் கூறுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமானால் பெங்களூருவில் போக்குவரத்து பாதை அமைப்பை சரி செய்ய வேண்டும். இல்லையேல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இன்னொரு பயனர் கூறுகையில், “உண்மை ப்ரோ. பெங்களூருவில் என் சகோதரியை மங்களூருக்கு ஏற்றிவிட்டேன். அவர் மங்களூருக்கு சென்றுவிட்டார். ஆனால் நான் ட்ராஃபிக்கில் தான் மாட்டிக்கொண்டிருந்தேன்” எனத் தெரிவித்தார்.





















