(Source: Poll of Polls)
Top Medical Colleges: தொடங்கிய நீட் கலந்தாய்வு; இந்தியாவில் டாப் 20 மருத்துவக் கல்லூரிகள் லிஸ்ட்- சிஎம்சி, எம்எம்சிக்கு எந்த இடம்?
Top Medical Colleges In India: 2024ஆம் ஆண்டு என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலின்படி, இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. க்யூஎஸ் சர்வதேச தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும் இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.

NEET UG Best Medical Colleges 2025: நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மத்திய அரசின் கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வும் மாணவர் சேர்க்கையும் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் சேரலாம்?
இளநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் மற்றும் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புகளில் சேர முடியும். இந்த ஆண்டு நீட் தேர்வில் 22.76 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 22.09 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இதில், 12.36 லட்சம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டு என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலின்படி, இந்த பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. க்யூஎஸ் சர்வதேச தரவரிசைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும் இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது.
- எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் - AIIMS), டெல்லி
NIRF, டெல்லியில் உள்ள தலைசிறந்த AIIMS கல்லூரிக்கு கற்பித்தல், கற்றல் மற்றும் வளங்கள் (TLR) பிரிவில் 97.33 மதிப்பெண் வழங்கியுள்ளது. TLR என்பது ஒரு நிறுவனத்தில் கற்பித்தல் மற்றும் கற்றலுக்கான வளங்கள் மற்றும் சூழலை மதிப்பிடுகிறது. NIRF தரவரிசையின்படி இது இந்தியாவின் சிறந்த மருத்துவ நிறுவனமாகும். உயர் மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவரும், எய்ம்ஸ் கல்லூரியில் படிக்கவே ஆசைப்படுவர்.
- பிஜிமர் - முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (PGIMER), சண்டிகர்
PGIMER 91.49 TLR மதிப்பெண்ணுடன் தேசிய தரவரிசைக் கட்டமைப்பால் இரண்டாவது சிறந்த மருத்துவக் கல்லூரியாக தரவரிசை செய்யப்பட்டுள்ளது. QS உலகத் தரவரிசையின்படி, உலகெங்கிலும் உள்ள சிறந்த மருத்துவ நிறுவனங்களில் இந்த நிறுவனம், 301-350 க்கு இடையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- சிஎம்சி- கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி, (CMC), வேலூர், தமிழ்நாடு
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 95.64 TLR மதிப்பெண்ணுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆராய்ச்சி, தொழில்முறை பயிற்சி மற்றும் கூட்டு செயல்திறன் (RPC) போன்ற துறைகளில் PGIMER கல்லூரியின் 79.94 மதிப்பெண்ணுடன் ஒப்பிடும்போது இந்தக் கல்லூரி 47.93 மதிப்பெண்ணுடன் பின்தங்கியுள்ளது.
- நிம்ஹான்ஸ் - தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS), பெங்களூரு
NIRF தரவரிசைப்படி இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் நிம்ஹான்ஸ், 88.30 TLR மதிப்பெண்ணுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
- ஜிப்மர் - ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER), புதுச்சேரி
NIRF-ன்படி புதுச்சேரி ஜிப்மர், இந்தியாவின் ஐந்தாவது சிறந்த மருத்துவக் கல்லூரி ஆகும். இந்த நிறுவனம் 86.45 TLR மதிப்பெண்ணையும் 44.84 RPC மதிப்பெண்ணையும் கொண்டுள்ளது.
- சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (SGPGIMS), லக்னோ, உத்தரப்பிரதேசம்
SGPGIMS, லக்னோ, NIRF தரவரிசைப்படி இந்தியாவின் ஆறாவது சிறந்த மருத்துவக் கல்லூரியாகும். இது முறையே 89.99 மற்றும் 54.03 TLR மற்றும் RPC மதிப்பெண்களைக் கொண்டுள்ளது.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU), வாரணாசி
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், 84.35 TLR மதிப்பெண்களுடன் இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஏழாவது இடத்தில் உள்ளது. QS உலகளாவிய தரவரிசை 2026-ன் படி சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களில் இது 1001-1200 க்கு இடையில் உள்ளது.
- அமிர்த விஸ்வ வித்யாபீடம், அமிர்தபுரி, கோயம்புத்தூர்
அமிர்த விஸ்வ வித்யாபீடம், அமிர்தபுரி 81.87 TLR மதிப்பெண்களைக் கொண்டு எட்டாவது இடத்தில் உள்ளது. உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இது 1001-1200 தரவரிசையில் உள்ளது.
- கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, மணிபால்
NIRF தரவரிசை 2024-ன்படி இந்தியாவின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இது 78.85 TLR மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.
- எம்எம்சி - சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, சென்னை
சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை, NIRF தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் 10ஆவது சிறந்த மருத்துவக் கல்லூரியாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது 87.89 TLR மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது.

NIRF தரவரிசை 2024-ன்படி 11 முதல் 20வது இடத்தைப் பிடித்த அடுத்த 10 சிறந்த மருத்துவ நிறுவனங்கள் இங்கே...!
- டாக்டர் டி.ஒய். பாட்டீல் வித்யாபீடம், புனே, மகாராஷ்டிரா
- சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
- ஸ்ரீ சித்ரா திருனால் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம், கேரளா
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), ரிஷிகேஷ், உத்தராகண்ட்
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), புவனேஸ்வர், ஒடிசா
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), ஜோத்பூர், ராஜஸ்தான்
- வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி & சஃப்தார்
- எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை, தமிழ்நாடு
- கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் (கே.ஜி.எம்.யூ), லக்னோ, உத்தரபிரதேசம்
- ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, தமிழ்நாடு






















