Tamilnadu Roundup: களைகட்டிய காணும் பொங்கல்! ஆர்ப்பரிக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup 16th january 2025: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு முழுவதும் இன்று காணும் பொங்கல் கொண்டாட்டம் உற்சாகம்
காணும் பொங்கலை முன்னிட்டு காலை முதலே சுற்றுலா தளங்களில் நிரம்பி வழியும் மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
காணும் பொங்கல் கொண்டாட்டம் காரணமாக சென்னையில் இன்று 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
காணும் பொங்கலை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற அலஙகாநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு கார், சிறந்த காளைக்கு டிராகடர் பரிசு
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்துடுத்து விலகும் நிர்வாகிகள் - சீமானுக்கு நெருக்கடி
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோலாகலமாக நடந்த விளையாட்டுப் போட்டிகள்
முதுமலைத் தெப்பக்காட்டில் கோலாகலமாக நடந்த யானைப் பொங்கல்
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விமானம் மூலமாக சென்னை வந்தனர்
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவு - விநாடிக்கு 254 கன அடியாக குறைந்தது