மேலும் அறிய

விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!

பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி: part time job பகுதி நேர வேலையாக வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரத்தை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்

இதுகுறித்து சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தியாகராஜன் கூறுகையில்,

இன்றைய காலத்தில் பெண்கள் மற்றும் வேலை இல்லா பட்டதாரிகள் தனது மொபைல் போன்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளின் மூலம் வீட்டிலே இருந்தபடி ஆன்லைனில் வேலை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் 'டெலிகிராம் டாஸ்க்' என்ற பெயரில் வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள், உட்கார்ந்த இடத்திலேயே எளிதாக சம்பாதியுங்கள் என்று விளம்பரங்களை போடுகின்றனர்.

அதனைநம்பி, விளம்பரத்தை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களை, அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ் ஆப் அல்லது இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு ஒரு டெலிகிராம் குழுவில் இணைக்கிறார். அவ்வாறு இணைக்கப்பட்டவர்களிடம் part time job 'பார்ட் டைம்' அல்லது 'முழு நேர' வேலை வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், அந்த குழுவில் ஏதேனும் போஸ்டினை ரிவார்ட்ஸ் அல்லது ரேட்டிங் செய்தால் உங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று ஏமாற்றுகின்றனர்.

இதனை நம்பி எளிதான வேலையை செய்ததால், அடுத்த நிலையான 'கோல்ட் ப்ரீமியம்' உள்ளிட்ட பல்வேறு படிநிலைகள் உள்ளது. அதற்கு செல்ல வேண்டும் என்றால் நீங்கள் லட்சக்கணக்கில் முன்தொகை கட்ட வேண்டும் என்று சிறிது சிறிதாக பணத்தை பறிக்கின்றனர்.

இதற்கிடையே, அது போலி எனதெரியவந்து பணத்தை திரும்ப கேட்டால், மேலும் பணம் அனுப்பினால் தான் திரும்பத் தருவோம் என்ற சைபர் மோசடி செய்கின்றனர். இதுபோன்று புதுச்சேரியில் இதுவரையில் 300க்கும் மேற்பட்ட நபர்கள், 5 கோடி ரூபாய் மேல் மோசடி கும்பலிடம் பணத்தை ஏமாந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே விளம்பரங்களை பார்த்து இளைஞர்கள் மற்றும் பெண்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget