TN Headlines Today: கோவை டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை...முதலமைச்சர் விடுத்த வேண்டுகோள்...மாநிலச் செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

TN Headlines Today:
- Senthil Balaji case: 'ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்?' - செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கேள்வி
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்ததை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, செந்தில் பாலாஜி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? என கேள்வி எழுப்பினர். வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/sendhil-balaji-case-seeking-to-set-aside-the-suspension-of-the-order-removing-senthil-balaji-from-the-cabinet-127391
- DIG Vijayakumar Suicide: 'டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலைக்கு குடும்ப சூழலோ, பணிச்சுமையோ காரணமல்ல’ - ஏடிஜிபி அருண் விளக்கம்
- CM MK Stalin: சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது; குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர்,”கலைஞர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் அரசு பின்பற்றி செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/persons-of-all-castes-to-be-appointed-as-temple-priests-in-tn-and-no-discrimination-says-tn-cm-mk-stalin-127330
- TN Rain Alert: இன்று நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை இருக்கும்.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
07.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 08.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-said-that-rain-will-continue-in-tamil-nadu-for-the-next-5-days-127396
- TN GOVT On Governor: மாற்றி பேசி மாட்டிக் கொண்ட ஆளுநர் ரவி? தமிழக அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்..!
முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது ஆளுநர் ரவி தவறான தகவல்களை பரப்புவதாக, தமிழக அரசு சார்பில் உரிய ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு இருந்தாலும், அப்படி எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என ஆளுநர் கூறுஇ இருப்பது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-govt-releases-letters-which-is-written-to-governor-ravi-over-cases-on-former-ministers-vijaybhaskar-veeramani-127399
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

