New Renault Duster: ரெனால்ட்டின் அட்டகாசமான புதிய டஸ்டர் எஸ்யூவி - இந்தியாவில் எப்போது அறிமுகம் தெரியுமா.?
New Renault Duster SUV: ரெனால்ட் நிறுவனத்தின் சூப்பர் ஹிட் மாடலான டஸ்டர் எஸ்யூவியின் புதிய மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகமாகிறது என்பது குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.

புகழ்பெற்ற ரெனால்ட் நிறுவனத்தின் ஹிட் மாடல்களில் ஒன்று டஸ்டர் எஸ்யூவி கார். இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்த இந்த காரின் புதிய தலைமுறை பதிப்பை விரைவில் அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
டஸ்டர் எஸ்யூவி
ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் எஸ்யூவி, 2012-ம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமானது. தொடக்கத்தில் நடுத்தர வர்கத்தினரால் விரும்பி வாங்கப்பட்ட இந்த கார், அதன் வடிவமைப்பு மற்றும் செயல்திறன் காரணமாக, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது, புதிய தலைமுறை டஸ்டர் காரை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்த உள்ளது ரெனால்ட் நிறுவனம்.
எப்போது அறிமுகம்.?
ரெனால்ட் இந்தியா தனது அடுத்த தயாரிப்பான புதிய டஸ்டர் எஸ்யூவி-யை அறிமுகப்படுத்த சிறிது நேரம் எடுத்துக் கொள்கிறது. 2025 ஆம் ஆண்டில் டஸ்டர் புதிய தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பெட்ரோல் பதிப்பு டஸ்டர் அடுத்த ஆண்டு மட்டுமே வரும் என்பதால், அதற்கு அதிக காத்திருப்பு தேவைப்படும்.
புதிய பதிப்பின் சிறப்பம்சங்கள் என்ன.?
ஒரு புதிய மாடுலர் தளத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய டஸ்டர் முந்தைய மாடலைவிட பெரியது மற்றும் Y வடிவ வடிவமைப்பு கூறுகளுடன் அதிக கட்டுமஸ்தான தோற்றத்தையும், நவீன தோற்றத்தையும் கொண்டுள்ளது.
இப்போதைக்கு புதிய டஸ்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வரும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் 3 வரிசை பதிப்பும் பின்னர் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய டேசியா டஸ்டருக்கான உட்புறங்கள் விசாலமான இடவசதியுடன், Rugged மற்றும் அடிப்படையானவை என்றாலும், இந்திய சந்தைக்கு ஏற்ப கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.
நவீன தொழில்நுட்பம்
இந்திய மாடலை பொறுத்தவரை, ஒரு பெரிய தொடுதிரை , டிஜிட்டல் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ADAS மற்றும் பலவற்றை எதிர்பார்க்கலாம். முன்பு கூறியது போல், சன்ரூஃப் மற்றும் பிற கூடுதல் அம்சங்கள் போன்ற இந்திய சந்தை தேவைகளுக்கு ஏற்ப உபகரணப் பட்டியல் மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஞ்சின்
நிலையான பெட்ரோல் எஞ்சின் பெரும்பாலும் 1.3 டர்போ பெட்ரோல் எஞ்சினாகவும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் உடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் முந்தைய டஸ்டரைப் போல், AWD பதிப்பை வர வாய்ப்பில்லை என தெரிகிறது. இந்த புதிய டஸ்டரின் ஆஃப்-ரோடு மற்றும் கட்டுமஸ்தான ஸ்டைலிங் அதன் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.
விலை என்ன.?
இளம் தலைமுறையினரை கவர்ந்திழுக்கும் விதமாக உள்ள புதிய ரெனால்ட் டஸ்டரின் விலை 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அது அறிமுகமாகும்போது தான் அதன் சரியான விலை தெரியவரும். எனினும், போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
காம்பாக்ட் SUV பிரிவில் ஏற்கனவே போட்டி அதிகமாக உள்ள நிலையில், டஸ்டருக்கு போட்டியிட நிறைய புதிய போட்டியாளர்கள் இருப்பார்கள். ஆனால், ரெனால்ட் டஸ்டர் இந்திய சந்தைகளில் நன்கு பிரபலமான எஸ்யூவி காராக உள்ளதாலும், நல்ல வடிவமைப்பு, வசதியான உட்புறம், ஆற்றல் மிக்க எஞ்சின், நவீன தொழில்நுட்பம் மற்றும் நம்பகத்தன்மையினாலும், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















