Krishna Drug Issue : ”நான் கொக்கைன் எடுக்கல”பல்டி அடித்த கிருஷ்ணாஶ்ரீ காந்த் வழக்கில் Twist
போதைப்பொருள் வழக்கில் விசாரணை வலையில் சிக்கியுள்ள நடிகர் கிருஷ்ணா தனக்கு போதைப்பொருளை பயன்படுத்தவே இல்லை என வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கழுகு படம் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்.நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரை போலீசார் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் சினிமா படப்பிடிப்பிற்காக சென்றதால அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர் கேரளாவில் இருப்பதாக சொன்னாலும் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது, இதனால் அவரை பிடிக்க 5 தனிப்படை போலீசார் தேடுதலில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் இன்று பிடித்தனர்.
இந்த நிலையில் அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார், இந்த விசாரணையில் அவர் தனக்கு எனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் அது தொடர்பாக சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கும் பிரதீப் குமாருக்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஸ்ரீகாந்த் உடன் மட்டுமே நட்போடு பழகி வந்தேன் என்றார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து நான் போதைப் பொருள் வாங்கிச் செல்வதாக பிரதீப் தவறாக தெரிவித்துள்ளார் என்று நடிகர் கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பிரசாத் என்கிற அதிமுக நிர்வாகி, நுங்கம்பாக்கத்தில் உள்ள பாரில் பிரச்சனை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீகாந்துக்காக பிரதீப் என்பவரிடம், பிரசாத் கொக்கேன் போதை மருந்தை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது போலீசார் விசாரணையில் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீ காந்திற்கு போதைப்பொருள் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சென்னை நுங்கம்பாக்கம் போலீசில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.





















