மேலும் அறிய

CM MK Stalin: சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது; குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM MK Stalin: இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி வைத்தார். 

சாதியால் யாரையும் தள்ளிவைக்கக் கூடாது என்ற நோக்கில் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர்,”கலைஞர் கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி, திராவிட மாடல் அரசு பின்பற்றி  செயல்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் ராஜஸ்தானில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளன. சாதியின் பெயரால் யாரையும் பிரித்து வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்து சமய அறநிலையத்துறையை கொண்டு வந்ததே திராவிட அரசுதான். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிறக்கும் குழந்தைக்களுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதே நீதிக்கட்சி ஆட்சியில்தான்.”என்று தெரிவித்தார். மணமக்களுக்கு தனது வாழ்த்துகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

மேலும் அவரது உரையில்,” எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை நோக்கிச் நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக, கல்வி - தொழில் பொருளாதாரம் - சமூகம் - சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோகோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

எந்த மனிதரையும் சாதியின் பேரில் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது. இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் பட்டியலினத்தவர்,  பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 உட்பட அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகரகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற கருத்தியல் என்பது இதுதான். நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது.

அனைத்துத் துரைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும்  என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது.

கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக ''ஆகிவிடக் கூடாது' என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனம் எழுதினார் அப்படி கோயில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதின்  கலைஞர் அவர்கள் எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. 

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து துப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லும் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரவாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர் செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடந்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு,  764 கோயில்களில் அன்னதானம்,  8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒரு பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
மாநில அரசு மீது பெண்களுக்கு நம்பிக்கை இல்லை - தமிழிசை செளந்தரராஜன்
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
TN Assembly Session LIVE: அந்த சார் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் பதில்
Embed widget