Srivilliputhur Priests Dance : மதுபோதையில் ஆபாச நடனம்!பெண்கள் மீது விபூதி பூசி அர்ச்சகர்கள் அட்டூழியம்
ஸ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் அர்ச்சகர்கள் மதுபோதையில் ஆபாச நடனம் ஆடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழமை வாய்ந்த பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் புகழ்வாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் அர்ச்சகர்கள் மதுபோதையில் கும்பலாக ஆபாச நடனமாடியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அறை நிர்வானமாக ஆபாச நடனமாடியுள்ளது பெரிய மாரியம்மனுக்கு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யும் கோமதிநாயாகம், வினோத், கணேசன் ஆகியோர் தான் என தெரிய வந்துள்ளது.
மேலும் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் முகத்தில் விபூதி அடிப்பது போன்ற இன்னும் சில முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களிலும் அங்குள்ள சில அர்ச்சகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில், கோவில் போன்ற புனித தளத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது அறநிலையத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், அம்மூவரையும் பணியிடை நீக்கம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கோவில் பணியாளர் கார்த்திக் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவர்மீதும் நடவடிக்கை பாயும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.





















