போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
aமுதலமைச்சர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு கொடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், கோஷ்டி பூசலால் காங்கிரஸ் கட்சி திண்டாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதலமைச்சராக சித்தராமையா பதவி வகித்து வருகிறார். முன்னதாக கடந்த 2023 ஆம் அண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு டிகே சிவக்குமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையே தான் அடுத்த முதலமைச்சர் யார் என்ற போட்டி இருந்தது. டிகே சிவக்குமாரை விட சித்தராமையா கட்சியில் சீனியர் என்ற அடிப்படையில் தான் காங்கிரஸ் தலைமை அவருக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது. அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கும் டிகே சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது.
நாளுக்கு நாள் டிகே சிவக்குமாருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏவான பசவராஜு சிவகங்கா இது தொடார்பாக பேசுகையில், ”அவருடைய விதியில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்ப்போம். டிசம்பர் மாதத்திற்கு பிறகு இது குறித்து பேசுவோம். என் முதலாளி டிகே சிவக்குமார் முதலமைச்சர் ஆனால் நானே முதல்வர் ஆனது போல் இருக்கும்” என்று கொளித்துப்போட்டுள்ளார்.
அதே நேரம் சித்தராமையாவுக்கு ஆதரவான எம்.எல்.ஏ-க்கள் பேசுகையில், “ முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் சிவக்குமாரின் ஆதராவாளர்களிடம் இல்லை. அது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திடம் இருக்கிறது” என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி மாறி மாறி டிகே சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்ப்பட்டுள்ளது காங்கிரஸ் மேலிடத்திடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தன்னுடைய முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்ள தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் சித்தராமையா ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.





















