TN Headlines: கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்; 13-ம் தேதி சென்னை வரும் கார்கே : முக்கிய செய்திகள்
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- Tamizhaga Vetri Kazhagam: இன்னும் ஒரே ஒரு படம்தான்! சினிமாவில் இருந்து விலகும் நடிகர் விஜய்!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம்(Tamizhaga Vetri Kazhagam) கட்சியைத் தொடங்கி உள்ளது, அரசியல் வட்டாரத்திலும் சினிமா வட்டாரத்திலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புலி வருது புலி வருது கதையாக அல்லாமல், கட்சியின் பெயரை அறிவித்துவிட்டார் நடிகர் விஜய். முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் படிக்க
- DMK - Congress: 13ம் தேதி சென்னை வரும் கார்கே! தி.மு.க. - காங்கிரஸ் தொகுதி பங்கீடு இறுதியாகுமா?
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான தி.மு.க. எந்த கட்சியுடனும் இதுவரை தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை. தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு இழுபறியாக உள்ளது. மேலும் படிக்க
- Tamizhaga Vetri kazhagam: இதுவே என் ஆழமான வேட்கை; நாடாளுமன்ற தேர்தல் கிடையாது: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை
நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் இன்று அதாவது பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய். அதில் தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri kazhagam) என பெயர் முடிவு செய்யப்பட்டு, அதனை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
- TN Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் குறையும் வெயிலின் தாக்கம்..
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Rice Price: விண்ணை முட்டும் அரிசி விலை: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை- ராமதாஸ்
அரிசி விலை விண்ணை முட்டும் நிலையில் ஏறி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்ன ரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க