அருணாச்சல பிரதேசத்திற்கு பெயர் அறிவித்த சீனா..! பிரிக்க முடியாத பகுதி என்று பதிலடி தந்த இந்தியா..!
இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதி அருணாச்சல பிரதேசம் என்று சீனாவிற்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியின் எல்லையில் அருணாச்சல பிரதேசம் அமைந்துள்ளது. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எவ்வாறு எல்லையில் பிரச்சினை செய்து வருகிறதோ, அதேபோல அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா இந்தியாவிற்கு அவ்வப்போது சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா நிராகரிப்பு:
இந்த நிலையில், அருணாச்சலபிரதேசத்திற்கு உள்பட்ட 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் ஜங்ஞனன் என்று சீன மொழியில் சீனா பெயர் சூட்டியது. சீனாவின் இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சீனாவின் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்துள்ள கண்டனத்தில், “ சீனா இத்தகைய முயற்சியை மேற்கொள்வது முதல்முறையல்ல. இதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதியாகும்” என்று தெரிவித்துள்ளது.
பெயர் அறிவித்த சீனா:
சீனா பெயர் அறிவித்த அருணாச்சல பிரதேசத்தின் பகுதியில் இரண்டு ஆறுகள், இரண்டு மலைப்பகுதிகள் அடங்கியிருந்துது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்தியாவின் அருணாச்சல பிரதேச பகுதிக்கு உரிமை கொண்டாடுவதும், சிக்கல் ஏற்படுத்துவதும் இது முதல்முறையல்ல.
கடந்த 2017ம் ஆண்டு சீன அரசு அருணாச்சல பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் 6 இடங்களுக்கு வேறு பெயர்களை அறிவித்தது. தென்திபெத்திற்கு உட்பட்ட பகுதியாக அறிவித்து சீன இந்த பெயர்களை அறிவித்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 2021ம் ஆண்டில் சீனா மீண்டும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு பெயர்களை அறிவித்தது.
தொடர் சர்ச்சை:
அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப்பகுதியில் கடந்தாண்டு சாலை அமைக்க சீனா முற்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும். கடந்தாண்டு எல்லையில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் மல்லுக்கட்டில் ஈடுபட்டதும் இரு நாடுகளுக்கு மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி நடந்து கொள்வது உலக நாடுகள் மத்தியில் சீனாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீனா கூறியதாவது, 1914ம் ஆண்டில் சிம்லா மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கிரேட் பிரிட்டன், சீனா மற்றும் திபெத் இடையேயான மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே பெயர்கள் அறிவிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க: Unemployement : இந்தியாவில் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை..வெளியான ஷாக் அப்டேட்...தமிழ்நாட்டின் நிலை என்ன...?
மேலும் படிக்க: CBSE Syllabus: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து முகலாயர்கள் குறித்த பாடம் நீக்கம்; என்சிஇஆர்டி அறிவிப்பு