இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
தனியார் பேருந்துவிற்கு இணையாக சவால்விடும் வகையில் அரசு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன.

விழுப்புரம்: தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பேருந்துகளின் நிறத்தை மாற்றி தனியார் பேருந்துவிற்கு நிகராக குளிர்சாதன பேருந்துவை மாற்றியுள்ளனர்.
புதிய குளிர்சாதன பேருந்துகள் அறிமுகம்
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) ஆகியவை குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்குகின்றன. இவை மாநிலத்திற்குள்ளும், அண்டை மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக குளிர்சாதன சொகுசு பேருந்துகள் பச்சை நிறத்தில் இருந்தன பி எஸ் 4 பேருந்துகளின் நிறம் நீலத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் பார்வைக்கு பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக, பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு கடந்த 2023ல் மாற்றப்பட்டு பெரும்பாலான மாவட்டங்களில் மஞ்சள் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், பேருந்துகளின் நிறத்தை தமிழக அரசு மாற்றியுள்ளன.
தனியார் பேருந்திற்கு சவால்
முதல் கட்டமாக குளிர்சாதன பேருந்துகள் மேல் பகுதி கருப்பு, கீழ் பகுதி சாம்பல் நிறத்திலும் பார்டர் பகுதியில் மஞ்சள், ஆரஞ்ச், வெண்மை நிறத்துடன் வண்ணம் பூசப்பட்டுள்ளது. தனியார் பேருந்துவிற்கு இணையாக சவால்விடும் வகையில் அரசு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளன.
விழுப்புரம், கரூர், நாகர்கோவில், திருநெல்வேலி பணிமனைகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் புதிய நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக இயக்கப்படும் பேருந்துகள் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இயக்கப்பட உள்ளன. பச்சை நிறமத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்டிமென்ட் ஆகவும் மஞ்சள் நிறம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்டிமென்ட் ஆகவும் இயக்கப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நீலம், மஞ்சள் நிறத்தில் இயக்கப்பட்டது தற்போது பல்வேறு 5 வண்ணத்தில் ஒன்று சேர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதிரடி காட்டும் அரசு போக்குவரத்து கழகம்
இதேபோல், கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 214 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 27 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் உத்தரவுப்படி, போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கரின் அறிவுறுத்தல்படி, நேற்று முதல் 23 புதிய அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும் பேருந்து சேவையை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். தொடர்ந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.





















