Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
அமெரிக்காவில், இந்தியர் ஒருவருக்கு எதிராக, இனவெறி மற்றும் பாகுபாட்டுடன் பேசிய அமெரிக்கருக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அப்படி என்ன பேசினார் அவர்.? பார்க்கலாம்.

அமெரிக்காவில், இந்தியர் ஒரு வரை பார்த்த அமெரிக்கர் ஒருவர், இனவெளியுடன் பேசி, அவரை இந்தியாவிற்கே திரும்பிப் போகச் சொல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில், அதைக் கண்டு சீற்றமடைந்து, அவ்வாறு பேசிய அமெரிக்கருக்கு, சமூக வலைதளங்களில் கண்டங்கள் எழுந்துவருகின்றன.
இந்தியரிடம் இனவெறி, பாகுபாடு காட்டி, திரும்பிப் போகச் சொன்ன அமெரிக்கர்
அமெரிக்காவில், இந்தியர் ஒருவரிடம் பேசிய ஒரு அமெரிக்கர், இனவெறியுடன் பேசி, இந்தியாவிற்கே திரும்பிப் போகுமாறு அவரிடம் கூறிய நிலையில், அந்த வீடியோவை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், அமெரிக்கர் இந்தியரை அணுகி, அவர் ஏன் அங்கு இருக்கிறார் என்று கேட்டதோடு, இந்தியர்கள் அங்கு குவிந்துள்ளதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கிறார். அதோடு, உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள் என்று இந்தியரிடம் கூறுகிறார். இந்த காணொளி தான், நெட்டிசன்களிடையே தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கர் பேசியது என்ன.?
தனது காரிலிருந்து இறங்கி வரும் ஒரு இந்தியரை பார்த்த அமெரிக்கர், அவரை நெருங்கி, நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய் ? ஏன் இங்கு இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு Yah என்று இந்தியர் கூறிய நிலையில், நீ ஏன் அமெரிக்காவில் இருக்கிறாய் என்று மீண்டும் கேட்கிறார்.
மேலும், நீங்கள்(இந்தியர்கள்) இங்கு இருப்பதை நான் விரும்பவில்லை என்று அமெரிக்கர் கூறுகிறார். அதற்கு, அப்படியா என்று இந்தியர் கேட்கிறார். உடனே, நீங்கள்(இந்தியர்கள்) ஏராளமானோர் இங்கே இருக்கிறீர்கள், இந்தியர்கள் நீங்கள் வெள்ளைக்காரர்களின் நாட்டில் வெள்ளம்போல்(நிறைய என்பதை குறிக்க) இருக்கிறீர்கள், அது அமெரிக்கர்களுக்கு சலிப்பாக இருக்கிறது, நீங்கள் இந்தியாவிற்கு திரும்பிப்போவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று கூறுகிறார். பின்னர் கேமராவை அவர் பக்கமே திருப்பி, இந்த பழுப்பு நிறத்தவர்கள்(Brown) எங்கள் நாட்டை ஆக்கிரமிப்பது சலிப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
Anti Christian behaviors pic.twitter.com/VCsquG6ieg
— Abrahamic Lincoln (@AbrahamicLs) July 6, 2025
அமெரிக்கரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
அமெரிக்கரின் இந்த பேச்சு, சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால், கமெண்ட்டுகளில் அமெரிக்கரை வறுத்தெடுத்து வருகின்றனர். அவரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பாரபட்சமானது என்றும் அவரை பலர் கண்டித்துள்ளனர்.
மேலும் பலர், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்தியர்கள் திறமையுடன் இருப்பதால், அவர்கள் எங்களை அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள் என்றும், இது அவர்களின் பாதுகாப்பின்மையையே காட்டுகிறது என்றும் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் ஒருவர், "அவரை அமெரிக்காவை விட்டு வெளியேறச் சொல்ல நீங்கள் யார்? அந்த அனுமதியை யார் உங்களுக்கு கொடுத்தது என்று கேட்டுள்ளதுடன், அவர் ஒரு அமெரிக்கர், அவர் வெற்றி பெற்றவர், ஆனால் நீங்கள் வெற்றி பெறாதவர், அதனால், அது அவருடைய பிரச்னையல்ல என்று கூறியுள்ளார். அதோடு, அமெரிக்கா ஒரு வெள்ளையர் நாடு என்று யார் உங்களுக்கு சொன்னது?, அமெரிக்கா கிறிஸ்தவர் அல்லாத, வெள்ளையரும் அல்லாத, சிவப்பு இந்தியர்களுக்கு சொந்தமானது" என்று கூறியுள்ளார்.
இப்படி, ஏராளமான நெட்டிசன்கள், அந்த மெரிக்கருக்கு எதிரான பொங்கி எழுந்துள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா.? பார்க்கலாம்.





















