பெண்கள் மீதான வன்முறை: திரையரங்குகள், வணிக வளாகங்களில் விழிப்புணர்வு பதாகைகள்! நீதிபதி வலியுறுத்தல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்களை தடுப்பதோடு பாலின பாகுபாட்டை முற்றிலும் களைய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஸ்ரீராம்
திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சட்டங்கள் குறித்தான பதாகைகள் வெளியிட வேண்டும் என பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் ஒரு நாள் கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்.தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் குறித்தான ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் திரு.கே.ஆர்.ஸ்ரீராம் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் ஸ்ரீராம் பேசுகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்களை தடுப்பதோடு பாலின பாகுபாட்டை முற்றிலும் களைய வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் குழந்தைகள் வளர்ப்பின் போதே பெண் குழந்தைகளை சிறுமைப்படுத்தியும், ஆண் குழந்தைகளை பெருமை படுத்த்தி வளர்ப்பதன் மூலமாகவே ஆண் பெண் பாலின பாகுபாடுகள் ஏற்படுவதால் குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் பாலின பாகுபாடு இல்லாமல் வளர்க்கும் முறையை பெற்றோர்கள் உடன்பட வேண்டும் என்பதோடு பெண்கள் எதிரான வன்முறையை ஒழிப்பதற்கும் பாலின பாகுபாட்டை களைவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றால் திரையரங்குகள், மற்றும் வணிக வளாகங்கள், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு தண்டனைகள் என்ன என்பது குறித்தான விளக்கங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என விழிப்புணர்வு கருத்தரங்கில் பெற்றோர்களுக்கும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்து பேசினார்.
மேலும் இந்த கருத்தரங்கில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற செயல்களுக்கு சட்டத்தில் என்ன தண்டனை உண்டு என்பதை பல்வேறு சட்ட திருத்தங்கள் வழியாக எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அந்தத் துறை சார்ந்த நீதிபதிகள் விளக்கிக் கூறினர்.பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் துவங்குவதற்கு முன்பாக நீதித்துறை, காவல்துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் மூலமாக வைக்கப்பட்டிருந்தார் விழிப்புணர்வு கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான நீதி அரசன் அனிதா சம்பத், நீதி அரசர் ஆர் என் மஞ்சுள, நீதியரசர் ஸ்ரீமதி மற்றும் தேனி மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் ஜே நடராஜன், கீழமை நீதிமன்ற நீதி அரசர்கள், தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற ரோடு கல்லூரி மாணவ மாணவிகள் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.





















