மொத்தமா மாற போகுது.. மாசு இல்லாத இந்தியா.. ஐஐடி மெட்ராஸின் அசத்தல் திட்டங்கள்!
2050ஆம் ஆண்டுக்குள் ‘100% கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து’ என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது ஐஐடி மெட்ராஸ்.
![மொத்தமா மாற போகுது.. மாசு இல்லாத இந்தியா.. ஐஐடி மெட்ராஸின் அசத்தல் திட்டங்கள்! IIT Madras launches major initiatives towards achieving India ambitious goal of 100 percent ZET மொத்தமா மாற போகுது.. மாசு இல்லாத இந்தியா.. ஐஐடி மெட்ராஸின் அசத்தல் திட்டங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/09/9301405877297116b5ca355cae2c9b0a1733742879263729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), 2050-ம் ஆண்டில் ‘100% கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்து’ என்ற இலக்கை எட்டுவதற்கான மிக முக்கிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்தியாவின் வாகனப் போக்குவரத்தில் 5 சதவீத அளவுக்கு மட்டுமே சரக்கு லாரிகள் உள்ள நிலையில், சுமார் 65 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. கணிசமான அளவு காற்றுமாசுக்கும், எரிபொருள் நுகர்வு செலவுகளுக்கும் இது வழிவகுக்கிறது.
ஐஐடி மெட்ராஸ் அறிமுகம் செய்யும் திட்டங்கள்:
எனவே, மின்சார சரக்கு லாரிகள் போன்ற கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்துவது அவசியம்.
இந்த நிலையில், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சிப் பூங்காவில் இன்று (9 டிசம்பர் 2024) நடைபெற்ற ‘கார்பன் உமிழ்வு இல்லாத சரக்குப் போக்குவரத்துக்கு மாற்றுதல்’ நிகழ்வில் இரண்டு பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, “விழிப்புணர்வு அளித்தல், ஏற்றுக் கொள்ளல், பின்பற்றுதல் என்ற நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் வலுவான உறவை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
இறுதியில், சரியான கருவிகள், பயிற்சி, முன்தயாரிப்புகள் மூலம் சரக்குலாரி மின்மயமாக்கலைப் பின்பற்ற உதவிகரமாக செயல்படுவோம். சரக்குலாரிகள் மின்மயமாக்கலுக்காக பல்வேறு வகைகளில் தொடர்புடையோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோன்ற குறைந்த தொடர்புடைய சமூகத்துடன் ஐஐடி மெட்ராஸ் இணைந்து பணியாற்றி வருகிறது. இ-டிரக்குகளை ஏற்றுக் கொள்வதில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்" என்றார்.
இந்தியாவின் டிரக்கிங் தொழில் என்பது சரக்கு போக்குவரத்து மூலம் விரைவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. ஐஐடி மெட்ராஸின் இத்தகைய திட்டங்கள், நீடித்த ஈடுபாட்டுடன், இந்தியா லாரிகளின் மின்மயமாக்கலை விரைவுபடுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பெட்ரோலியத்தின் இறக்குமதி செலவுகளை மிச்சப்படுத்துகிறது. போட்டித்தன்மையை மேம்படுத்துகிறது. உமிழ்வைக் குறைக்கிறது, ஓட்டுநர் வசதி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்க செய்கிறது.
முக்கிய அம்சங்கள்:
- உள்ளடக்கம் மற்றும் தகவல் தொடர்பு உள்ளூர் மொழிகள் அல்லது ஆங்கிலம் அல்லது இந்தியில், உள்ளூர் தேவைகளைப் பொறுத்து இருக்க வேண்டும்.
- யூடியூப் சேனல், யூடியூப் விளம்பரங்கள், வீடியோக்கள், டிஜிட்டல் வினாடி வினா, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தகவல்களை பரப்ப வேண்டும்.
இதையும் படிக்க: BJP DMK: திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்; - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)