மேலும் அறிய

Maha Shivaratri 2025 : மகா சிவராத்திரி தோன்றியது எங்கு தெரியுமா ? தாழம் பூ விற்கு சாபம் கொடுத்த இடமும் இதான் ;முழு விவரம் உங்களுக்காக !

இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி maha shivaratri 2025;-

மகா சிவராத்திரி maha shivaratri 2025 தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று மாத சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மட்டும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவார்கள். உலகம் முழுக்க உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகிமை மிக்க இந்த மகா சிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில்தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றினார் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 புராண நிகழ்வு...,

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டையைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார். அந்த நெருப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது. அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்புப் பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்து உள்ளே சென்றார்.

பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறேன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை. இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற்சியை கைவிட்டு திரும்பி வந்தார். விஷ்ணுவிடம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

பொய் சாட்சி சொன்ன தாழம் பூ

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிருப்பதை அறிந்தார். நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்டதாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது. தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான், நெருப்புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமான் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

தாழம் பூவிற்கு சாபம் கொடுத்த இடம் திருவண்ணாமலை

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங்களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியில் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்று மலராவாய் என்றும் சாபம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாமலையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்துதான் சூரியன், சந்திரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன்றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது..

முதன் முதலில் மகா சிவராத்திரி திருவண்ணாமலையில் தான் தோன்றியது

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணாமலையில்தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவராத்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி விழா தோன்றிய தலமும் திருவண்ணாமலையே. திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும், மகா சிவராத்திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்குப் பரவியது.சிவபெருமானுக்குரிய முக்கிய 25 வடிவங்களில் முதலாவது அமைவது லிங்கோத்பவர் வடிவம்தான். லிங்கம் என்பது சிவ வடிவம். அந்த லிங்கத்தில் இருந்து தோன்றிய உருவம்தான் லிங்கோத்பவர். அதாவது லிங்கத்துக்கு தலை, கை, கால் முளைத்தால் கிடைக்கும் உருவம்தான் லிங்கோத்பவர்.

சிவபெருமான் முதலில் உருவம் இல்லாமல் அருவமாகத்தான் இருந்தார். ஆனால் உலக உயிர்கள் முன்பு தோன்ற நினைத்தபோது அருவுருவாகவும், பிறகு உருவமாகவும் தோன்றினார். அருவத்துக்கும், உருவத்துக்கும் இடையில் நின்றதே அருவுருவமாகும். இதுதான் திருவண்ணாமலையில் நெருப்புப் பிழம்பாக நின்ற லிங்கோத்பவர் உருவமாகும். எனவே தான் திருவண்ணாமலையில் லிங்கோத்பவர் வழிபாடு, மிக, மிக சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும்

திருவண்ணாமலை ஆலயத்தில் கருவறை கோஷ்டத்தில் மூலவருக்கு நேர் பின்புறத்தில் மேற்கு திசை நோக்கி லிங்கோத்பவர் இருப்பதை காணலாம். இந்த லிங்கோத்பவர், மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். பொதுவாக லிங்கோத்பவரை பார்க்கும் போதெல்லாம் அவருக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். மலையில் இருட்டத் தொடங்கும் நேரத்தில் இவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டால் நமது ஆணவம், அகந்தை எல்லாம் ஓடோடி விடும். மகாசிவராத்திரி நாளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவாலயங்களில் மூன்றாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அருவுருவமாக லிங்கோத்பவர் அருள்பாவித்த காலமாக இதை சொல்கிறார்கள்.

ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் மகா சிவராத்திரியின் இரண்டாம் ஜாம பூஜையை லிங்கோத்பவருக்குரிய பூஜையாக நடத்துகிறார்கள். லிங்கோத்பவர் முதன் முதலில் திருவண்ணாமலையில் தோன்றியவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் மற்ற தலங்களுக்கு முன்பாக இரண்டாம் ஜாமத்திலேயே திருவண்ணாமலையில் பூஜைகள் நடத்தப்படுவதாக குருக்கள் தெரிவிக்கின்றனர். லிங்கோத்பவர் பூஜையின்போது மட்டும் சுவாமிக்கு நெய்பூசி, வெண்ணீர் அபிஷேகம் செய்து, பிறகு கம்பளி போர்த்தி தாழம்பூ சூட்டுவார்கள். இந்த ஒரு காலத்தில் மட்டுமே சிவனுக்கு தாழம்பூ அணிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா சிவராத்திரி பூஜை

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரியன்று இந்த பூஜையை நேரில் பார்த்து தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கெல்லாம் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்யப்படும். பிறகு தங்கக்கவசம் அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெறும். அன்றிரவு 4 ஜாம பூஜைகள் நடத்துவார்கள். இரவு 7 மணிக்கு முதல் ஜாம பூஜை, 11 மணிக்கு இரண்டாம் ஜாம பூஜை நள்ளிரவு 1 மணிக்கு மூன்றாம் ஜாம பூஜை, அதிகாலை 4 மணிக்கு நான்காம் ஜாம பூஜை நடத்துவார்கள். இதில் இரவு 11 மணி முதல் 1 மணி வரையிலான இரண்டாம் ஜாம பூஜை லிங்கோத்பவருக்கான பூஜையாக நடைபெறும். அடி, முடி காண முடியாதபடி சிவபெருமான் நெருப்புப் பிழம்பாக நின்ற நேரம் அது. எனவே இந்த நேரத்தில் லிங்கோத்பவரை வழிபாடு செய்வதும், கிரிவலம் வருவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த   கூடை, கூடையாக வில்வம் 

மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களுக்காக இரவு கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வைப்பார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் லட்சதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மகாசிவராத்திரி தினத்தன்று லட்ச தீபத்தை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அது மட்டுமல்ல, கிரிவலம் வரும் பக்தர்கள், மகாசிவராத்திரி தினத்தில் மட்டும் வில்வ கூடையை ஏந்தியபடி கிரிவலம் செல்வது வித்தியாசமாக இருக்கும். நெருப்பு மலையாக இருக்கும் சிவபெருமானை குளிர்ச்சிப்படுத்த பக்தர்கள் கூடை, கூடையாக வில்வம் எடுத்துச் செல்கிறார்கள் என்பது ஐதீகமாகும்.

திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும்

சிவபெருமான் நெருப்பு மலையாக உருவெடுத்தது பற்றி பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழக்கூடும். கார்த்திகை தீபத்தன்றுதானே ஈசன் நெருப்பு உருவில் தோன்றினார் என்று நினைக்கலாம். உண்மையில் சிவபெருமான் திருவண்ணாமலையில் இரண்டு தடவை ஜோதி ரூபமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மாசி மாதம் விஷ்ணு, பிரம்மாவின் ஆணவத்தையும், அகந்தையையும் விரட்ட நெருப்புப் பிழம்பாக வந்தார். கார்த்திகை மாதம் அம்பாளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தப்போது ஜோதிச்சுடராக வந்தார். முதல் ஜோதி தரிசனத்துக்கும் இரண்டாம் ஜோதி தரிசனத்துக்கும் வித்தியாசம் உள்ளதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாசியில் நெருப்புப் பிழம்பு, கார்த்திகையில் ஜோதி சுடர்.

சிவபெருமான் ஜோதி ரூபமாக வெளிப்பட்டதால் தான் திருவண்ணாமலை தலம், அக்னி தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அண்ணாமலையார் சன்னதியின் அர்த்த மண்டபத்தில் சிறிது நேரம் நின்று பாருங்கள். அனல் வீசுவதுபோல இருக்கும். வியர்த்துக் கொட்டும். திருவண்ணாமலை நெருப்புத்தலம் என்பதை உறுதிப்படுத்த இந்த உதாரணம் ஒன்றே போதும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Garment Export: நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
நீ வரி போட்டுக்கோ, நாங்க ரூட்ட மாத்துறோம்; ஜவுளி ஏற்றுமதி; 40 முக்கிய சந்தைகளுக்கு இந்தியா குறி
Kharge Slams Modi: “இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
“இந்தியாவுக்கு ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு, நாட்டை பாதுகாக்க தவறிவிட்டீர்கள்“- மோடியை வெளுத்த கார்கே
Russia Vs Ukraine: அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
அய்யா, நிறுத்த மாட்டீங்களா.? உக்ரைனில் மேலும் ஒரு பிராந்தியத்திற்குள் நுழைந்த ரஷ்ய படைகள்
Ravi Mohan Studios: நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
நடிகர் ரவி மோகனின் முதல் தயாரிப்பு; ‘BRO CODE' படத்தின் கலக்கலான ப்ரோமோ வீடியோ வெளியீடு
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
43 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் விவாகரத்து: நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு! கணவரின் வேதனை என்ன?
Trump Vs Modi: “உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
“உங்க தலை சுத்துற அளவுக்கு வரி போட்டுடுவேன்னு மோடி கிட்ட சொன்னேன்“- ட்ரம்ப் ஓபன் Talk
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
சமையலுக்காக உயிரையே விட்ட கணவர்: முட்டைக்குழம்பு வைக்கமறுத்த மனைவி- விபரீதம்!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Modi VS Trump: போன் மேல் போன் போட்ட ட்ரம்ப்.. அட்டென் பண்ண மறுத்த மோடி! கோபத்தின் உச்சியில் ஜீ!
Embed widget