மேலும் அறிய
பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் நுழைந்த மேகா ஷெட்டி!
சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுத்துள்ள நிலையில், தற்போது கன்னட சின்னத்திரை நடிகை தமிழ் திரையுலகின் பக்கம் ஒதுங்கி இருக்கிறார்.
கன்னட சீரியலில் இருந்து தமிழில் வாய்ப்பு தேடும் நடிகை
1/6

தொலைக்காட்சியில் இருந்து, கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது. மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் முன் அனுபவம் இல்லாமலேயே இவர் இந்த இடத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மங்களூரில் பிறந்த இவர் முதன்முதலில் வெற்றிகரமான கன்னட சீரியல் ‘ஜோதே ஜோதேயலி’ மூலம் நடிப்புத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார்.
2/6

நடிப்புத் துறைக்குள் அறிமுகமானதில் இருந்தே, மேகா ஏழு கன்னட படங்களில் நடித்துள்ளார். 'டிரிபிள் ரைடிங்', 'தில்பசந்த்' மற்றும் 'கைவா' ஆகிய படங்கள் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அவரது அடுத்த படமான 'ஆஃப்டர் ஆபரேஷன் லண்டன் கஃபே' வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, அதே நேரத்தில் 'கிராமாயணா' மற்றும் 'சீட்டா' படத்தின் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
Published at : 18 Feb 2025 10:47 PM (IST)
மேலும் படிக்க





















