Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: ஐசிசியின் மினி உலகக் கோப்பை எனப்படும், சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி பாகிஸ்தானில் இன்று தொடங்குகிறது.

Champions Trophy 2025: ஐசிசியின் மினி உலகக் கோப்பை எனப்படும், சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன.
சாம்பியன்ஸ் ட்ராபி 2025:
ஐசிசியின் மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் ட்ராபியின் 9வது எடிஷன் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் வகிக்கும் அணிகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்க முடியும். தங்களது முதல் சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு வென்ற பாகிஸ்தான் இந்த முறை போட்டியை நடத்துகிறது. இருப்பினும் பாதுகப்பு மற்றும் அரசியல் காரணங்களால் அந்நாட்டிற்கு பயணிக்க மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. மார்ச் 9ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் அது துபாயில் நடைபெறும். தவறினால் இறுதிப்போட்டி பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபியில் நடைபெறும்.
8 அணிகள் 2 குழுக்கள்:
2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு உலகக் கோப்பையில் லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் 2004ம் ஆண்டு பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இந்த போட்டியில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. அஃப்கானிஸ்தான் அணி முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையி சிறப்பாக செயல்பட்டு, ஐசிசி போட்டிகளில் முதல்முறையாக அரையிறுதி வரை தகுதி பெற்றது. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் லீக் சுற்றின் முடிவில், இரண்டு குழுக்களிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறும்.
குரூப் - A: பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து
குரூப் - B: ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா
பரிசுத்தொகை:
கடந்த எடிஷனை விட இந்த எடிஷனிற்கான பரிசுத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு $2.24 மில்லியன், இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கு $1.12 மில்லியன், மற்றும் அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா $560,000 வழங்கப்படும். மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன், இது 2017 எடிஷனை விட 53 சதவீதம் அதிகமாகும்.
முக்கிய போட்டிகள்:
இன்று கராச்சியில் முதல் போட்டி நடைபெற்றாலும், நாளை துபாயில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா களமிறங்குகிறது. அததொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதேவார இறுதியில் உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியா இங்கிலாந்தை எதிர்கொள்ளும். அரையிறுதிப்போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5ம் தேதிகளில் துபாய் மற்றும் லாகூரில் நடைபெற உள்ளன.
நேரடி ஒளிபரப்பு:
இந்தியாவில் ஜியோஸ்டாரில் போட்டியின் நேரலை ஒளிபரப்பப்படும். இது ஸ்டார் மற்றும் நெட்வொர்க்18 சேனல்களில் லீனியர் டிவியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரில் OTTயிலும் கிடைக்கும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

