DMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!
திமுகதான் உண்மையான சங்கிகள், 2026-ல் திமுக படு தோல்வியை தழுவும் என விசிக பிரமுகர் திமுகவை கடுமையான தாக்கி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கிய சிபிசிஐடி காவல்துறையை கண்டித்தும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க கோரியும் தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு துணை போகும் தமிழக காவல்துறையை கண்டித்தும் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கடந்த 10-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மண்டலச் செயலாளர் வேலு.குணவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் செம்பனார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெய்சிங், ஸ்டாலின், சங்கை நவித், ராஜேஷ், ஆனந்த், கருணாநிதி, தலித் சிவா, அருள், தியாகு, அமிர்துவளவன், பாலா உள்ளிட்ட ஏராளமான ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்பாட்டத்தின் போது கண்டன உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் வேலு.குணவேந்தன் திமுகவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்நிலையில் அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகதான் உண்மையான சங்கிகள் என்றும், சங்கிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது திமுகதான், வருகிறன்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவும், திமுக வீழ்த்தப்படும் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்கும் என கூட்டணி கட்சியான விசிக பொறுப்பாளர் பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





















