மேலும் அறிய

BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை

BJP DMK: மதுரையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட  மத்திய பாஜக அரசு பரிசீலனை செய்வதாக, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

BJP DMK: மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட  வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அண்ணாமலை இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தகவல்:

அண்ணாமலை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  இது தொடர்பாக, மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் கிருஷ்ண ரெட்டிக்கு கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். 

இதையடுத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.  மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின்  நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி” என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு தீர்மானம்:

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து, அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தான், இன்று கூடும் தமிழக சட்டப்பேரவையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடக் கோரி தனித்தீர்மானத்தை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு பரிசீலிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது அரிட்டாப்பட்டி உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget