RCB IPL 2025 full schedule: கப் இல்லாட்டியும் சாம்பியன் தான்..! பெங்களூரு அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்
RCB IPL 2025 full schedule: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகளின், முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

RCB IPL 2025 full schedule: பெங்களூரு அணி இந்த முறையாவது தனது முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
ஐபிஎல் 2025 - பெங்களூர் அணி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, 17 ஆண்டுகளாக தொடர்ந்து களமிறங்கி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும், அதிகப்படியான ரசிகர்களை கொண்ட ஒரு அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி திகழ்கிறது கடந்த சீசனில் பாப் டூஃப்ளெசிஸ் தலைமையில் களமிறங்கி, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், கோப்பையை வெல்லும் வாய்ப்பை மீண்டும் இழந்தது. இதற்காக ஆர்சிபி அணி விராட் கோலி உள்ளிட்ட 3 பழைய வீரர்கள் மட்டும் அடங்கிய, முற்றிலும் புதிய பிளேயிங் லெவனை கட்டமைத்துள்ளது. அந்த அணியை வழிநடத்த ரஜத் பட்டிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூர் அணி விளையாட உள்ள, லீக் போட்டியின் மொத்த விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் போட்டி விவரங்கள்:
- கொல்கத்தா vs பெங்களூரு - இரவு 7:30 மணி - மார்ச் 22 - கொல்கத்தா
- சென்னை vs பெங்களூரு - இரவு 7:30 மணி - மார்ச் 28 - சென்னை
- பெங்களூரு vs குஜராத் - இரவு 7:30 - ஏப்ரல் 2 - பெங்களூரு
- மும்பை vs பெங்களூரு - இரவு 7:30 மணி - ஏப்ரல் 7 - மும்பை
- பெங்களூரு vs டெல்லி - இரவு 7:30 - ஏப்ரல் 10 - பெங்களூரு
- ராஜஸ்தான் vs பெங்களூரு - மதியம் 3:30 - ஏப்ரல் 13 - ஜெய்ப்பூர்
- பெங்களூரு vs பஞ்சாப் - இரவு 7:30 - ஏப்ரல் 18 - பெங்களூரு
- பஞ்சாப் vs பெங்களூரு - பிற்பகல் 3:30 - ஏப்ரல் 20 - முள்ளன்பூர்
- பெங்களூரு vs ராஜஸ்தான் - இரவு 7:30 மணி - ஏப்ரல் 24 - பெங்களூரு
- டெல்லி vs பெங்களூர் - இரவு 7:30 மணி - ஏப்ரல் 27 - டெல்லி
- பெங்களூரு vs சென்னை - இரவு 7:30 - மே 3 - பெங்களூரு
- லக்னோ vs பெங்களூரு - இரவு 7:30 மணி - மே 9 - லக்னோ
- பெங்களூரு vs ஐதராபாத் - இரவு 7:30 மணி - மே 13 - பெங்களூரு
- பெங்களூரு vs கொல்கத்தா - இரவு 7:30 மணி - மே 17 - பெங்களூரு
சாதிப்பாரா புதிய கேப்டன்:
டூப்ளெசிஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து, இளம் வீரர் ரஜத் பட்டிதர் பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2021ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக அவர், பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல படிதாரும் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தார்.
31 வயதான படிதார், சையத் முஷ்டாக் அலி டிராபி (SMAT) மற்றும் விஜய் ஹசாரே டிராபி 2024-25 சீசனில் மத்தியப் பிரதேச அணிக்கு கேப்டனாக் செயல்பட்டார். அவர் மத்தியப் பிரதேசத்தை SMAT இன் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றாலும், இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக அவரது அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் கப் இல்லாவிட்டாலும் மனங்களை வென்று சாம்பியன்களாக திகழும் ஆர்சிபி அணி, இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்துள்ளது.
ஆர்சிபி அணி வீரர்கள் விவரங்கள்:
விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் ஷர்மா, க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி




















