Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
ராக்கெட் தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன் முறையாக, ஒரு நாட்டிலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டை, வேறு ஒரு நாட்டில் தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.

விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துவரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தற்போது மேலும் ஒரு சாதனையை புரிந்துள்ளது. முதன் முறையாக, ஒரு நாட்டிலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்ட ராக்கெட்டை, வேறு ஒரு நாட்டில் தரையிறக்கி சாதனை படைத்த நிலையில், அதன் பிரமிக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஃப்ளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களுடன் நேற்று தனது ஃபால்கன் ராக்கெட்டை, ஃப்ளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளிப்படை நிலையத்திலிருந்து ஏவியது. இந்த ஏவுதலுக்கு, ஃபால்கன் 9 முதல் நிலை பூஸ்ட்டரை பயன்படுத்தப்பட்டது. இது, இந்த பூஸ்டரின் 16வது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய பிராட்பேண்ட் இணைய வலையமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் மற்றொரு மைல்கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகாமாஸில் தரையிறக்கப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட்
ஃப்ளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட ஃபால்கன் 9 ராக்கெட், ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியபின், பகாமாஸ் நாட்டின் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் பிரமிக்க வைக்கும் வீடியோவை வெளியிட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்.
Congratulations @SpaceX team!
— Elon Musk (@elonmusk) February 19, 2025
pic.twitter.com/m5pV56OaeZ
ஒரு ராக்கெட், ஒரு நாட்டிலிருந்து ஏவப்பட்டு விண்வெளிக்கு சென்று, மற்றொரு நாட்டில் தரையிறக்கப்பட்டது இதுவே முதல் முறை எனவும், தனது மற்றொரு பதிவில் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திரும்பும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: Elon Musk Atrocity: வெள்ளை மாளிகை வெயிட்ட அதிர்ச்சி வீடியோ...சிரித்த எலான் மஸ்க்.. இது உங்களுக்கே அடுக்குமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

