Champions Trophy: 2 முறை சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற இந்திய அணி - கடந்து வந்த பாதை!
Champions Trophy: சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியாவின் ரெக்காட்ஸ் பற்றிய விவரங்களை காணலாம்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் ட்ராபி ( ICC Champions Trophy 2025) தொடர் தொடங்க இருக்கிறது. 1998ம் ஆண்டு முதல் நடைபெறும் மினி உலகக்கோப்பை தொடரில் இந்தியா அணியின் ரெக்கார்ட்ஸ் பற்றி இங்கே காணலாம்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்த முறை சவாலில் வென்றுவிடும் நம்பிக்கையுடன் இருக்கிறது. விராட் கோலி, ஷூப்பன் கில், ஸ்ரேயாஸ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் களமிறங்குகிறது.இளம் வீரர்களான ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் இருப்பது அணிக்கு வலிமை சேர்க்கௌம். 2023-ல் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் runners-up இதில் வெற்றி முனைப்புடன் இருக்கிறார்கள்.
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் பற்றி இங்கே காணலாம்.
8 முறை நடத்தப்பட்டுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இரண்டு முறை இந்தியா அணி கோப்பையை வென்றுள்ளது; 4 முறை கோப்பையை வென்றுள்ளது. ICC KnockOut Trophy என்று அழைப்பட்டது. அதன்பிறகு சாம்பியன்ஸ் டிராபி என்ற மாற்றப்பட்டது.
1998:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி அரையிறுதியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்றது.
2000:
கென்யாவில் நடைபெற்ற தொடரில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. சவுரவ் கங்குலியின் 117 ரன் எடுத்தபோதும் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
2002:
இலங்கையில் நடைபெற்ற போட்டியில், சவுரவ் கங்குலில் தலைமையிலான இந்திய அணி முதன்முறையான சாம்பியன்ஸ் கோப்பையை வெற்றி பெற்றது. அப்போது இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டதால் இலங்கையும் கோப்பை பகிந்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
2004:
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி முதன் முறையாக குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலேயே இந்திய அணி பாகிஸ்தானுடன் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியது.
2006:
இந்தியாவில் நடைபெற்ற தொடரில், ராகுல் டிராவிட் தலைமையிலான அணி களமிறங்கியது. இந்தத் தொடரில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் சுற்று போட்டியில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, மேற்கு வங்கம் அணிகளுடன் தோல்வியடைந்து இந்திய அணி லீக் சுற்றுகளிலேயே வெளியேறியது.
2009: மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளிடம் தோற்று வெளியேறியது.
2013:
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையான சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றது. பிர்மிங்க்ஹாம் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 5 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
2017:
இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றியது. ஆனால், பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை சந்தித்தது.
சாம்பியன்ஸ் ட்ராபி - இந்திய அணி போட்டிகள்:
- பிப்ரவரி, 20 -2025 - இந்தியா vs வங்காளதேசம் , துபாய்
- பிப்ரவரி, 23, 2025 - இந்தியா vs பாகிஸ்தான், துபாய்
- மார்ச்,2,2025 - இந்தியா vs நியூசிலாந்து , துபாய்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் ட்ராபி - இந்திய அணி - 2025:
கேப்டன்: ரோகித் சர்மா, துணை கேப்டன்: சுப்மன் கில்
அணி: விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், சிவம் துபே
உத்தேச பிளேயிங் XI: ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

