"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
மு.க.ஸ்டாலினின் கோபாலபுரம் வீட்டில் உள்ள பெண்கள் தவிர எந்த பெண்களுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
ஒழுங்கா நடத்தத் தெரியல
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஒரு ஏர்ஷோவை ஒழுங்கா நடத்தத் தெரியல. ஒரு ஏர்ஷோவை ஒழுக்கமா நடத்த தெரியல. அத்தனை அப்பாவி மக்கள் உயிரிழந்திருக்காங்க. இவர் மணிப்பூர் பாலிடிக்ஸ் பத்தி சொல்லிகிட்டு இருக்காரு. சென்னையில் மையப்பகுதியில விமான சாகசம் நடக்குதுனு தெரிஞ்சு. பெங்களூர்ல ஏர்ஷோ நடக்குது. போயி பாத்துட்டு வரச்சொல்லுங்க. பெங்களூர்ல உதயநிதி ஸ்டாலினை அனுப்பி எப்படி நடத்துறாங்கனு பாருங்க..
என்ன சொன்னாலும் புரியாது:
லட்சக்கணக்கான மக்கள் தினமும் நடக்குது. ஒரு பிரச்சினையும் இல்லாம நடக்குது. மத்திய அரசு நடத்துறாங்க. மத்திய அரசு வசதிகளோட நடக்குது. ஏர்போர்ட்டை நடக்குது. இவரு மணிப்பூர்ல நடந்ததைப் பத்தி பேசுறாரு. மணிப்பூர்ல நடந்ததைப் பத்தி என்ன பேசுனாலும் அவருக்குப் புரியாது.
மணிப்பூர்ல பா.ஜ.க.வோட குற்றம் என்ன? உயர்நீதிமன்றம் ஒரு சமுதாயத்துக்கு எஸ்டி அந்தஸ்து கொடுக்குறாங்க. இரண்டு சமுதாயத்துக்குள்ள பிரச்சினை கட்டுக்குள்ள கொண்டு வந்துருக்காங்க. அங்க ஜனாதிபதி தலைமையில ஆட்சி நடக்குது. அதுனால முதலமைச்சர் அவரோட வேலையை சரியா பாக்காம மணிப்பூர்ல அது நடக்குது. கும்பமேளாவுல அது நடக்குதுனு பேசிகிட்டு இருக்காரு.
பாதுகாப்பு இல்லை:
உள்ளூர்ல, சொந்த மாநிலத்துல நடக்குறதப் பத்தி ஏன் பேசமாட்றாரு. ஆட்சி 4 வருஷம் முடிஞ்சது. ஏடிஜி சுற்றறிக்கை வெளியிட்ருக்காரு. டேவிட்சன் தேவாசிர்வாதம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக குழந்தைகளுக்கு எதிராக அதிகரிச்சுருக்கு. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஒத்துகிட்றாரு. முதலமைச்சர் ஏன் ஒத்துகிட மாட்டேங்குறாரு?
4 வருஷம் தூங்கிட்டு சீனியர் ஆபீசர் வீட்டுல ஆர்டர்லியா இருக்குற பெண் காவலரை ஸ்டேஷனுக்கு அனுப்புங்க. சிறப்புநீதிமன்றம் என்ன பண்ணப்போறாங்க? அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் என்ன ஆச்சுனே தெரியல. அவங்க வீட்ல இருக்க பெண்கள் நல்லா இருக்காங்க. கோபாலபுர வீட்டைத் தாண்டி எந்த பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

