"3 கேமரா வச்சு படம் எடுத்தா பெரிய இயக்குனரா?" அட்லீ, லோகேஷை அட்டாக் செய்தாரா ஆர்வி உதயகுமார்?
3 கேமராக்களை வைத்து படம் எடுப்பவர்களையே பெரிய இயக்குனர் என்று ஹீரோக்கள் நினைத்துக் கொள்கின்றனர் என்று ஆர்வி உதயகுமார் பேசியுள்ளார்.

சின்னக்கவுண்டர், எஜமான் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ஆர்பி உதயகுமார் டெக்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
பெரிய படங்கள்:
இப்போ எல்லாம் எந்த சின்னப்படத்துக்கு கூப்பிட்டாலும் போயிட்றது. நான், ராஜன் சார், பேரரசு எல்லாம் யாரு கூப்பிட்டாலும் போற ஆளுங்க. எங்களுக்கு வேற வேலையே இல்லனு அடுத்தவங்க நினைச்சா கூட நாங்க கவலையே பட்றது இல்ல.
உண்மையாவே, பெரிய படங்கள்ல நடிகர்கள் மட்டும் இருக்காங்க. சின்னப்படங்கள் அந்த உணர்வுகளோட இருக்குது. ஜெயிக்கனுங்குற வெறி இருக்குது. சின்னப்படங்களை தொடர்ந்து வெற்றிப் பெற வைக்க வேண்டும். அந்த சின்னப்படத்துல இருந்துதான் பெரிய டைரக்டர். உடனே ஒரு பெரிய நடிகர்கிட்ட கூட்டிட்டு போயி அவரை ஒன்னுமில்லாம பண்ணிடுவாங்க.
பெரிய டைரக்டர் கிடையாது:
உதயகுமார் படம், பாரதிராஜா படம், பாக்யராஜ் படம்னு பேரு வாங்குற மாதிரி படம் பண்ணுங்க. அப்போதான் தமிழ் சினிமா நல்லா இருக்கும். பேரரசு எழுதுன பாடல்கள்தான் விஜய்யோட அரசியல் வாழ்க்கைக்கு ஒரு ஆதாரமா இருக்குது. இன்றைய தமிழ் சினிமாவோட தரம், டெக்னாலஜி நல்லா இருக்குது. ஆனா கதைதான் சரியில்ல.
நாங்க கிரேன், ரவுண்ட் ட்ராலி வச்சே படத்தை ஓட்டிடுவோம். நீங்க ஒரே ஷாட்டை 10 கேமரா, 5 கேமரா வச்சு 15 ஆங்கிள்ல எடுக்குறீங்க. நாங்க ஒரே ஷாட்டை ஒரே ஆங்கிள்ல எடுப்போம், அதுதான் படத்துல வரும். தெளிவான திரைக்கதை, தெளிவான காட்சி அமைப்பு உள்ள படங்கள் எப்பவுமே வெற்றி பெறும். 3 கேமரா வச்சு எடுக்குறவன்தான் பெரிய டைரக்டர்னு நிறைய ஹீரோ தப்பா நினைச்சுகிட்டு இருக்காங்க.
ஒரே கேமரா வச்சு ஒரே ஆங்கிள்ல படத்துக்கு என்ன வேண்டும்னு நினைச்சு எடுக்குறவன்தான் டைரக்டர். ரொம்ப நாள் கழிச்சு அந்த மாதிரி ஒரு படத்தை பாக்குறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
3 கேமராக்களை வைத்து படம் எடுப்பவர்களைத்தான் பெரிய இயக்குனர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்று ஆர்வி உதயகுமார் எந்த இயக்குனர் பெயரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இன்றைய தமிழ் சினிமாவில் அட்லீ, லோகேஷ் கனகராஜ் போன்ற பல இயக்குனர்கள் இதுபோன்று 3 கேமராக்களைப் பயன்படுத்தி எடுக்கின்றனர்.
முன்னணி இயக்குனர்:
உரிமை கீதம் என்ற படம் மூலமாக 1998ம் ஆண்டு இயக்குனரான ஆர்.வி. உதயகுமார் இயக்கிய கிழக்கு வாசல் படம் அவருக்கு புதிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின்பு அவர் இயக்கிய சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரான், நந்தவன தேரு என அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உலா வந்தவர்.
தமிழில் கடைசியாக 2005ம் ஆண்டு கற்க கசடற என்ற படத்தை இயக்கினார். அதன்பின்பு, தமிழில் எந்த படத்தையும் அவர் இயக்கவில்லை. தெலுங்கில் 2011ம் ஆண்டு மிஸ்டர் ராஸ்கல் என்ற படத்தை இயக்கினார். இதுவே இவரது கடைசி படம் ஆகும். மேலும், தற்போது பல படங்களில் முக்கிய வேடங்களில் ஆர்வி உதயகுமார் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















